நெருங்கும் தீபத் திருநாள்; லிட்டில் இந்தியாவில் கூட்ட நெரிசலைத் தடுக்க நடவடிக்கை

இன்­னும் சில நாட்­களில் தீபா­வளி வந்­து­வி­டும்.

நெருங்­கிக்­கொண்­டி­ருக்­கும் தீபத் திரு­நாளை முன்­னிட்டு தேவை­யான பொருட்­களை வாங்க லிட்­டில் இந்­தி­யா­வில் கூட்­டம் அலை­மோ­து­வது வழக்­கம்.

ஆனால் தற்­போது சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 கிருமி சமூக அள­வில் மள­ம­ள­வென பரவி வரு­கிறது.

இதைக் கருத்­தில்கொண்டு தீபா­வ­ளியை முன்­னிட்டு லிட்­டில் இந்­தி­யா­வில் கூட்ட நெரி­ச­லைத் தடுக்க மேம்­பட்ட பாது­காப்பு நிர்­வாக நட­வ­டிக்­கை­கள் நடை­மு­றைப்

படுத்­தப்­படும் என்று அதி­கா­ரி­கள் ஏற்­கெ­னவே தெரி­வித்து இருந்­த­னர்.

சிராங்­கூன் சாலை-கேம்­பல் லேன் சந்­திப்­பில் பாத­சா­ரி­கள் சாலை­யைக் கடக்­கும் இடம் நேற்­றி­லி­ருந்து நாளை வரை மாலை 6 மணி­யி­லி­ருந்து இரவு 1 மணி வரை மூடப்­படும்.

அதை­ய­டுத்து, தீபா­வ­ளிக்கு முந்­திய நாள் மாலை 6 மணி­யி­லி­ருந்து இரவு 2 மணி வரை அவ்­வி­டம் மூடப்­படும் என்று

சிங்­கப்­பூர் பய­ணத்­து­றைக் கழ­கம் தெரி­வித்­தது.

"சுங்காய் சாலை­யி­லும் டன்­லப் ஸ்தி­ரீட்­டி­லும் உள்ள சாலை கடக்கு மிடங்­க­ளுக்கு மக்­கள் திருப்பி

விடப்­ப­டு­வர்.

"உச்ச வேளை­களில் லிட்­டில் இந்­தி­யா­வின் முக்­கி­யப் பகு­தி­களில் நெரி­சல் ஏற்­ப­டா­மல் தடுப்­பதை இது உறு­திப்­ப­டுத்­தும்," என்று கழ­கம் கூறி­யது.

அடுத்த சில நாட்­களில் வாடிக்­கை­யா­ளர் கூட்­டம் அதி­க­ரிக்­கக்­கூ­டும் என்­ப­தால் அவர்­கள் வெவ்­வேறு நேரங்­களில் பொருள் வாங்க வச­தி­யாக சில கடை­கள் தங்­கள் வர்த்­தக நேரத்தை நீட்­டிப்­ப­தா­கத் தெரி­வித்­துள்­ளன.

தீபா­வளி நெருங்­கு­வ­தால் கூட்ட நெரி­ச­லைத் தடுக்க சிராங்­கூன் சாலை-கேம்­பல் லேன் சந்­திப்­பில் பாத­சா­ரி­கள் சாலை­யைக்

கடக்­கும் இடம் நேற்று

மூடப்­பட்­டது. படம்: தமிழ் முரசு

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!