ரயீசா கான்: நாடாளுமன்றத்தில் பொய் சொன்னேன்

பாட்­டா­ளிக் கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான ரயீசா கான், பாலி­யல் வன்­கொ­டுமை விவ­கா­ரத்­தில் தாம் பொய் சொன்­ன­தாக நாடா­ளு­மன்­றத்­தில் ஒப்­புக்­கொண்­டுள்ளார்.

இதை­ய­டுத்து விசார­ணைக் குழு முன்பு அவர் முன்­னி­லை­யாக வேண்­டிய கட்­டா­யம் ஏற்­பட்­டுள்­ளது.

நாடா­ளு­மன்­றத்­தில் பகிர்ந்­து­கொண்ட சம்­ப­வத்தை மீட்­டுக் கொள்­வ­தா­க­வும் பொய் கூறியதற்கு தம்மை மன்­னிக்­கு­மா­றும் அவர் கேட்­டுக்கொண்­டார்.

தமக்கு 18 வய­தா­கும்­போது தாமே பாலி­யல் துன்புறுத்தலுக்கு ஆளா­ன­தால் அந்த விவ­கா­ரத்தை நாடா­ளு­மன்­றத்தில் சொன்னதாக அவர் விளக்­கம் அளித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதி நாடா­ளு­மன்­றத்­தில் பேசிய ரயீசா கான், மூன்று ஆண்­டு ­களுக்கு முன்பு பாலி­யல் பலாத் ­கா­ரத்­தால் பாதிக்­கப்­பட்ட 25 வயது பெண்ணுடன் புகார் அளிக்க போலிஸ் நிலையத்துக்குச் சென்ற தாகவும் அப்­போது பாதிக்­கப்­பட்ட பெண்ணை விசா­ரித்த போலிஸ் அதி­காரி ஒருவர், பெண் அணிந்­தி­ருந்த உடை, மதுபழக்கம் குறித்து தகாத வார்த்தைகளில் பேசி­ய­தா­க வும் கூறியிருந்தார்.

ஆனால் பாதிக்­கப்­பட்ட பெண்­ணு­டன் தான் போலிஸ் நிலை­யத்­துக்­குச் செல்­ல­வில்லை என்று நாடாளு­மன்­றத்­தில் ரயீசா கான் நேற்று தெரிவித்தார். மாறாக, அந்தப்பெண், மக­ளிர் ஆத­ர­வுக் குழு­வி­டம் கூறி­யதை அவர் அனு மதியில்லாமல் நாடாளுமன்றத்தில் தெரிவித்ததாக அவர் சொன்னார்.

நாடா­ளு­மன்­றத்­தில் பாலி­யல் பலாத்கார சம்பவம் குறித்து ரயீசா கூறியபோது அதுபற்றி விசாரணை நடத்த விவரம் தருமாறு சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் வலியுறுத்தினார்.

ஆனால் ரயீசா கான் மேல் விவரம் தர மறுத்துவிட்டார்.

காவல்துறையினர் அவரிடம் விவரம் கேட்டும் அதற்குப் பலன் இல்லாமல்போனது.

இதனால், காவல்­து­றையே அப்­படி­யொரு சம்­ப­வம் நடந்ததா என்­பது குறித்து தீவிர விசா­ரணை நடத்­தி­யது. அந்­தச் சம்­ப­வத்தை காவல்­துறையி­ன­ரால் கண்­டு ­பி­டிக்க முடி­யாததால் அப்­ப­டி­யொரு சம்­ப­வம் நடந்­தி­ருக்க வாய்ப்பு இல்லை என்று காவல்­துறை முடிவுக்கு வந்தது.

இந்த நிலை­யில் ரயீசா கான் பொய் சொன்­ன­தாக நேற்று ஒப்­புக் கொண்­டுள்­ளார்.

செங்­காங் குழுத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்­பி­ன­ரான அவர், மூன்று சம­யங்­களில் பொய் சொன்னதாகவும் கூறினார்.

இதையடுத்து நாடாளுமன்ற சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது என்று வலியுறுத்திய அவைத் தலைவர் இந்திராணி ராஜா, ரயீசா மீது அதி­கா­ர­பூர்வ புகாரைப் பதிவு செய்­தார். "இந்த விவ­கா­ரம் விசா­ர­ணைக் குழு­வி­டம் ஒப்­ப­டைக்­கப்­படும். அது, நாடா­ளு­மன்ற சிறப்­பு­ரி­மை­களை மீறி­ய­தா­கக் கூறப்­ப­டு­வது குறித்து விசா­ரிக்­கும். இதற்கு நாடா­ளு­மன்ற சபாநா­யகர் டான் சுவான் ஜின்­னும் ஒப்­புதல் அளித்­துள்­ளார்," என்று நேற்று நாடாளுமன்றத்தில் இந்­தி­ராணி ராஜா தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!