தடுப்பூசி போட்டோருக்கான பயணத் திட்டம் நீட்டிப்பு; நவம்பர் 29 முதல் இந்தியா சேர்ப்பு

இந்­தி­யா­வில் இருந்து தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்ள பய­ணி­கள், தனிமை உத்­த­ரவை நிறை­வேற்ற வேண்­டிய தேவை­யின்றி நவம்­பர் 29 முதல் சிங்­கப்­பூர் வர­லாம். இந்­தோ­னீ­சியப் பய­ணி­க­ளுக்­கும் இந்த ஏற்­பாடு (விடிஎல்) நீட்­டிக்­கப்­பட்டு உள்­ளது.

இந்த நாடு­க­ளு­டன் கத்­தார், சவூதி அரே­பியா, ஐக்­கிய அரபு சிற்­ற­ர­சு­களில் இருந்­தும் பய­ணி­கள் டிசம்­பர் 6 முதல் சிங்­கப்­பூர் வர­மு­டி­யும். தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­க­ளுக்­கான பய­ணத் திட்­டம் நீட்­டிக்­கப்­பட்டு, அதில் இப்­போது இந்த நாடு­கள் சேர்க்­கப்­பட்டு இருக்­கின்­றன.

இந்த ஏற்­பா­டு­கள் பற்­றிய மேல் விவ­ரங்­கள் விரை­வில் அறி­விக்­கப்­படும் என்று நேற்று சிங்­கப்­பூர் சிவில் விமா­னப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் அறி­வித்­தது.

சிங்­கப்­பூ­ரில் இருந்து தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட பய­ணி­கள் தனிமை உத்­த­ரவை நிறை­வேற்ற வேண்­டிய தேவை­யின்றி இந்­தோ­னீ­சியா செல்­வ­தற்கு இது­வரை கதவு திறக்­க­வில்லை.

இருந்­தா­லும் இந்­தியா, கத்­தார், சவூதி அரே­பியா, ஐக்­கிய அரபு சிற்­ற­ர­சு­ நாடு­களில் இருந்து தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்ள பயணி­கள் சிங்­கப்­பூர் வந்து செல்­ல­லாம். இந்த நாடுகள் சிங்கப்பூர் பயணி களுக்கு ஏற்கெனவே எல்லை களைத் திறந்து உள்ளன.

இத்­த­கைய ஏற்­பாட்­டின்­கீழ் உள்ள அந்­தந்த நாடு­க­ளின் நிபந்­தனை­க­ளைச் சரி­பார்த்­துக்­கொள்ளும்­படி பய­ணி­க­ளுக்கு ஆணை­யம் ஆலோ­சனை கூறி­யது.

இத­னி­டையே, நேற்று நடந்த கொவிட்-19 சிறப்­புப் பணிக்­குழு செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் பேசிய போக்­கு­வ­ரத்து அமைச்­சர் எஸ். ஈஸ்­வ­ரன், இந்த விமா­னப் பய­ணத் திட்­டத்­தில் இப்­போது சேர்க்­கப்­பட்டு இருக்­கும் நாடு­கள் முக்­கி­ய­மா­னவை என்­ப­தைச் சுட்­டினார்.

எடுத்­துக்­காட்­டாக, சாங்கி விமா­ன­ நி­லை­யத்­தில் 2019ல் வந்­தி­றங்­கிய பய­ணி­களில் ஏறத்­தாழ 7 விழுக்­காட்­டி­னர் இந்­தி­யா­வைச் சேர்ந்­த­வர்­கள் என்­றார் அவர்.

இப்­போ­தைய நாடு­க­ளை­யும் சேர்த்து தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ருக்­கான தனிமை உத்­த­ர­வற்ற பய­ணத் திட்­டத்­தில் மொத்­தம் 21 நாடு­கள் இடம்­பெற்­றி­ருக்­கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!