29ஆம் தேதி தொடக்கம்

சிங்கப்பூர்-மலேசியா தரைவழி 'விடிஎல்' பயணம்: முதற்கட்டமாக 2,880 பேர்க்கு அனுமதி

இம்­மா­தம் 29ஆம் தேதி திங்­கட்­கி­ழமை முதல், சிங்­கப்­பூ­ரர்­கள், நிரந்­த­ர­வா­சி­கள், நீண்­ட­கால அனு­மதி அட்டை வைத்­தி­ருப்­போர் என மலே­சி­யா­வில் இருந்து ஒவ்­வொரு நாளும் 1,440 பேர்வரை உட்­லண்ட்ஸ் கடற்­பா­லம் வழி­யாக சிங்­கப்­பூ­ருக்கு வர முடி­யும்.

பிரத்­தி­யேகப் பேருந்­துச் சேவை­க­ளைப் பயன்­ப­டுத்தி அவர்­கள் இங்கு வந்­தி­றங்­கி­ய­பின் தங்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்­ளத் தேவை­யில்லை.

அதே­போல, சிங்­கப்­பூ­ரில் இருந்து மலே­சி­யர்­கள், நிரந்­த­ர­வா­சி­கள், நீண்­ட­கால அனு­மதி அட்டை வைத்­தி­ருப்­போர் என 1,440 பேர் வரை மலே­சி­யா­விற்குச் செல்ல முடி­யும்.

இரு நாடு­க­ளுக்­கும் இடை­யிலான நில­வழி தடுப்­பூ­சிப் பய­ணத்­த­டத் திட்­டம் (விடி­எல்) இதற்கு வழி­வகை செய்­கிறது.

இத்­திட்­டத்­தின்­கீழ் இயக்­கப்­படும் பிரத்­தி­யேக பேருந்­துச் சேவை­க­ளுக்­கான பய­ணச்­சீட்­டு­கள் இன்று காலை 8 மணி­யில் இருந்து விற்­ப­னைக்கு விடப்­படும்.

சிங்­கப்­பூ­ரில் இருந்து மலே­சியா செல்­வ­தற்­கான பய­ணச்­சீட்­டுக் கட்­ட­ணம் பெரி­ய­வர்­க­ளுக்கு $15, சிறார்­க­ளுக்கு $8 என நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது. மலே­சி­யா­வில் இருந்து சிங்­கப்­பூர் வரு­வ­தற்­கான பய­ணச்­சீட்­டு­, பெரி­ய­வர்­களுக்கு 20 ரிங்­கிட்­டுக்­கும் சிறு­வர்­க­ளுக்கு 10 ரிங்­கிட்­டுக்­கும் விற்­கப்­படும்.

நில­வழி 'விடி­எல்' திட்­டத்­தின்­கீழ் பய­ணம் செய்­வோர், தாங்­கள் செல்­ல­வி­ருக்­கும் நாட்­டின் குடி­மக்­க­ளா­கவோ நிரந்­த­ர­வா­சி­க­ளா­கவோ அல்­லது நீண்­ட­கால அனுமதி அட்­டை­தா­ரர்­க­ளா­கவோ இருக்க வேண்­டும்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் சிங்­கப்­பூர்-மலே­சியா நில எல்­லை­கள் மூடப்­பட்­ட­தைத் தொடர்ந்து, தத்­தம் நாடு­களில் உள்ள குடும்ப உறுப்­பி­னர்­க­ளைப் பிரிந்து வாழும் ஊழி­யர்­கள், அவர்­களை மீண்­டும் சந்­திக்க இந்த ஏற்­பாடு முன்­னு­ரிமை அளிக்­கிறது.

தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்­ளத் தேவை­யின்றி, துவாஸ் இரண்­டா­வது பாலம் வழி­யே சிங்­கப்­பூர்- மலே­சியா இடையே மீண்­டும் பய­ணத்­தைத் தொடங்­கவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

"தரை­வழி விடி­எல் பய­ணத் திட்­டத்­தைத் தொடங்­கு­வது, இரு நாட்டு மக்­க­ளை­யும் பொரு­ளி­யல்­களை­யும் மீண்­டும் இணைப்­ப­தற்­கான ஒரு பெரிய நட­வ­டிக்கை. இது, இரு­த­ரப்பு உற­வு­களை இன்னும் மேம்­ப­டுத்­தும்," என்று பிர­தமர் லீ சியன் லூங் தெரி­வித்துள்­ளார்.

முதற்­கட்­ட­மாக, அன்­றா­டம் ஒவ்­வொரு திசை­யி­லும் 32 பேருந்­துச் சேவை­கள் இயக்­கப்­படும். ஒரு பேருந்தில் 45 பேர்­வரை பய­ணம் செய்­ய­லாம். காலை 7.30 மணி முதல் இரவு 9.30 மணி­வரை, அரை­மணி நேர இடை­வெளி­யில் அவை இயக்­கப்­படும்.

சிங்­கப்­பூ­ரின் 'டிரான்ஸ்­டார் டிரா­வல்' நிறு­வ­னம், ஜோகூ­ரின் லார்­கின் சென்ட்­ரல் பேருந்து முனை­யம் - உட்­லண்ட்ஸ் தற்­காலி­கப் பேருந்து நிலை­யத்­திற்கு இடையே நாள்­தோ­றும் 32 பேருந்­துச் சேவை­களை இயக்­கும். அதே­போல், மலே­சி­யா­வின் ஹண்­டால் இண்டா (காஸ்வே லிங்க்) நிறு­வனம், லார்­கின் சென்ட்­ரல் - குவீன் ஸ்தி­ரீட் முனை­யத்­திற்கு இடையே 32 பேருந்­துச் சேவை­களை இயக்­கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!