தேசிய இயக்கம் தொடங்கியது: தடுப்பூசி போட்டுக்கொள்ள மாணவர்கள் நாட்டம்

சிங்­கப்­பூ­ரில் தொடக்­கப்­பள்ளி 4 முதல் 6ஆம் வகுப்புவரை படிக்­கும் மாண­வர்­களுக்கு கொவிட்-19 தடுப்­பூசி போடும் இயக்­கம் நேற்று சரளமாகத் தொடங்­கி­யது.

சிறார்­கள் ஆர்­வத்­து­டன் தங்­கள் பெற்­றோ­ரு­டன் தடுப்­பூசி நிலை­யத்­துக்குச் சென்று ஃபைசர்/கொமிர்­னாட்டி தடுப்­பூசி போட்டுக்­கொண்­ட­னர். இதற்­காக நேற்று ஏழு நிலையங்­கள் செயல்­பட்­டன.

முதல் நாளான நேற்று ஏழு நிலை­யங்­களி­லும் 3,300 ஒதுக்­கப்­பட்ட இடங்­கள் அனைத்­தும் எடுத்­துக்­கொள்­ளப்­பட்­ட­தாக கல்வி அமைச்­சும் இளம் பருவ மேம்­பாட்டு முக­வை­யும் நேற்று அறி­வித்­தன.

வரும் ஜன­வ­ரி­ மாதத்தில் மேலும் எட்டு நிலையங்கள் செயல்­படும்.

தொடக்­கப்­பள்ளி 4 முதல் 6ஆம் வகுப்பு வரை படிக்­கும் பிள்­ளை­களின் பெற்­றோருக்குச் சென்ற புதன்­கி­ழமை ஏறத்­தாழ 110,000 குறுஞ்­செய்தி தக­வல்­கள் அனுப்பப்­பட்டு தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள மாண வர்கள் அழைக்­கப்­பட்­ட­னர். அவர்களில் 40%க்கும் மேற்­பட்­டோர் தடுப்­பூசி போட்டுக்­ கொள்ள பதிந்துகொண்டுள்­ள­னர்.

திரு­வாட்டி பவித்ரா கைலா­சன், 47, என்ற கணி­னித்­துறை நிர்­வாகி, நேற்று அனுஜா கைலா­சன், 11, என்ற தன் புதல்வி­யு­டன் சென்ஜா-கேஷியூ சமூக மன்­றத்­தில் செயல்­பட்ட தடுப்­பூசி நிலை­யத்­திற்கு வந்­தி­ருந்­தார்.

"தடுப்­பூசி நீளமாக இருக்­கும் என்று செல்வி அனு­ஜா­வின் சகோ­தரி சொன்­ன­தால் அனு­ஜா­வுக்கு பயம் இருந்­தது. ஆனால் தடுப்­பூசி நிலை­யத்­தில் தாதி­யர்­கள் மிக­வும் அன்­பு­டன் அமை­தி­யாக எல்­ லா­வற்­றை­யும் அனு­ஜா­வுக்கு விளக்­கி­னர்.

"இரண்டு தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட நான், காப்­பூ­சிக்­காக (பூஸ்­டர்) காத்­தி­ருக்­கி­றேன். தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ள­வில்லை என்­றால் மோச­மான விளை­வு­கள் ஏற்­பட்டு இருக்­கும். என்­னு­டைய புதல்­வி­யை­யும் காப்­பாற்ற விரும்பி அவரை தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள அழைத்து வந்தேன்," என்று திருவாட்டி பவித்ரா கூறினார்.

பய­மின்றி, வலி­யின்றி தடுப்­பூசி போட்டுக்­கொண்டதாகவும் இரண்­டா­வது ஊசிக்­காக காத்­தி­ருப்­ப­தாகவும் சவூத் வியூ தொடக்­கப்­பள்ளியில் பயிலும் செல்வி அனுஜா கூறி­னார்.

மாண­வர்­க­ளுக்­கான தேசிய தடுப்­பூசி இயக்­கம் ஐந்து மற்­றும் அதற்­கும் அதிக வய­துள்ள சிறா­ருக்­கும் நீட்­டிக்­கப்­படும்.

கல்வி அமைச்சின் பள்­ளிக்­கூ­டங்­களில் தொடக்­கப்­பள்ளி 1 முதல் 3ஆம் வகுப்பு வரை பயி­லும் மாண­வர்­களுக்­கும் மத­ரசாக்­களில் பயி­லும் மாண­வர்­க­ளுக்­கும் அடுத்த ஆண்டு ஜன­வரி 5 முதல் முன்­பதிவு தொடங்­கும். ஐந்து முதல் 11 வரை வயதுள்ள சிறா­ருக்கு இப்­போது ஃபைசர் -பயோ­என்­டெக்/கொமிர்­னாட்டி கொவிட்-19 தடுப்­பூசி மட்­டுமே அனு­ம­திக்­கப்­பட்டுள்ளது.

12 மற்­றும் அதற்­கும் அதிக வய­துள்ள சிறார், பெற்­றோர் அல்­லது பொறுப்­பாளருடன் நேரடியாகச் சென்று 22 தடுப்­பூசி நிலை­யங்­களில் எந்த நிலை­யத்­திலும் தடுப்­பூசி போட்டுக்­கொள்­ள­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!