வீட்டிலிருந்து வேலை செய்தல்: மனிதவள அமைச்சு வழிகாட்டும்

சிங்­கப்­பூர் ஊழி­ய­ர­ணிக்கு வீட்­டில் இருந்து வேலை­செய்­யும் ஏற்­பாடு முக்­கி­யத் தெரி­வாக இருக்­க­லாம் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

ஆயி­னும், அத்­த­கைய ஏற்­பா­டு­களை ஒழுங்­கு­ப­டுத்­து­வ­தற்­கான சட்­டங்­களை இயற்­று­வ­தில் மனி­த­வள அமைச்சு அவ­ச­ரம் காட்­டாது என்று மனி­த­வள துணை அமைச்­சர் கான் சியாவ் ஹுவாங் தெரி­வித்து இருக்­கி­றார்.

"குறைந்­தது கால்­வாசி நாள்­களுக்­குத் தங்­களுடைய ஊழி­யர்­களை வீட்­டில் இருந்து வேலை செய்ய அனு­ம­திக்­கும் நடை­மு­றை­யைத் தொடர்­வோம் என்று பெரும்­பான்மை­ நிறு­வ­னங்­கள் தெரி­வித்­துள்­ளன. இந்­நி­லை­யில், அதன் தொடர்­பில் சட்­ட­மி­யற்ற அவ­ச­ரப்­படக்­கூ­டாது. அப்­ப­டிச் செய்­வது, பணி­யி­டத்­தில் நீக்­குப்­போக்­கற்ற நிலையை உரு­வாக்கி, பொரு­ளி­யல் மீட்­சிக்கு இடை­யூறை ஏற்­ப­டுத்­தி­வி­ட­லாம்," என்று திரு­வாட்டி கான் நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று கூறி­னார்.

கடந்த 2020ஆம் ஆண்­டில், நிறு­வ­னங்­களில் பணி­யாற்­றி­யோ­ரில் நால்­வ­ரில் மூவர், பணி­யி­டத்­தை­விட்டு வெளி­யில் இருந்­த­படி வேலை செய்­த­தாக அவர் குறிப்­பிட்­டார்.

சட்­ட­மி­யற்­று­வது சிறந்த தீர்­வாக அமை­யா­மல் போக­லாம் என்­றார் திரு­வாட்டி கான்.

மாறாக, நிறு­வ­னங்­க­ளுக்­கும் ஊழி­யர்­க­ளுக்­கும் வழி­காட்­டு­வ­தி­லும்; நடை­மு­றைக்­கேற்ப, நீடித்து நிலைக்­கும் வகை­யில் வீட்­டி­லி­ருந்து வேலை செய்­வ­தை­யும் நீக்­குப்­போக்­கான வேலை ஏற்­பா­டு­க­ளை­யும் அமல்­ப­டுத்­து­வ­தற்­கான வளங்­களை வழங்கி உத­வு­வ­தி­லும் தமது அமைச்சு கவ­னம் செலுத்­து­கிறது என்று அவர் சொன்­னார்.

அவற்­றில், நீக்­குப்­போக்­கான வேலை ஏற்­பா­டு­க­ளுக்­கான முத்­தரப்பு ஆலோ­ச­னை­யும் திட்­ட­நி­லை­களும் அடங்­கும்.

இப்­போது நடப்­பி­லுள்ள வேலை­வாய்ப்­புச் சட்­டம் போன்ற சட்­டங்­கள் இடம் சார்ந்­த­தல்ல என்­றும் ஊழி­யர்­கள் எந்த இடத்தில் இருந்து வேலை­செய்­தா­லும் அது பொருந்­தும் என்­றும் திரு­வாட்டி கான் தெளி­வு­ப­டுத்­தி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!