சிங்கப்பூரில் வேலைபார்க்கும் வெளிநாட்டவருக்கு இது தொய்வில்லா பொங்கல்

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர்களின் நம்பிக்கை. கடல்கடந்து இருக்கும் தங்கள் சொந்தபந்தங்களுடன் கூடியவிரைவில் இணைவோம் என்ற நம்பிக்கையோடு பொங்கலை எந்தவொரு தொய்வுமின்றி சிங்கப்பூரில் வேலைபார்க்கும் வெளிநாட்டவர் கொண்டாடினர். சிலர் லிட்டில் இந்தியா வட்டாரத்துக்கு வழிபடவும் கொண்டாட்ட உணர்வைப் பெறவும் வந்திருந்தனர்.

“மலேசியாவில் பொங்கல் தினம் பொது விடுமுறையாக இருப்பதால் ஒவ்வொரு ஆண்டும் அங்கு சென்று பொங்கல் கொண்டாடுவது வழக்கம். ஆனால், கொவிட்-19 சூழலில் மலேசியாவில் உள்ள உறவுகளைப் பார்த்தே இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. இருப்பினும், இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் எங்களது திருமணம் நடக்கவிருப்பதால் அதனை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இதனால் எங்களுக்கு இந்தப் பொங்கல் இனிய பொங்கலாக உதித்து இருக்கிறது," என்றார் லிட்டில் இந்தியா வட்டரத்துக்கு வருங்கால மனைவி ஷியாமளாவுடன் வந்திருந்த, செர்ட்டிஸ் சிஸ்கோ காவல் அதிகாரி தினேஷ், 30.

இனிக்கும் பொங்கலைக் குடும்பத்துடன் சாப்பிட்டால் இன்னும் கூடுதல் தித்திப்பு. அந்த வாய்ப்பு இல்லையென்றாலும், நண்பர்களுடன் நாளைக் கொண்டாடிய மனநிறைவு பலருக்கு.

“எப்போதுதான் மலேசியாவுக்குப் போவோம் என்று ஏக்கமாக உள்ளது. எல்லைக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் உடனே மலேசியாவுக்குச் சென்றுவிடுவோம். குடும்பத்துடன் இங்கிருந்தாலும் மலேசியாவில் பொங்கல் விழா மிக விமரிசையாக இருக்கும். நண்பர்கள் நாங்கள் கூடி கோயிலுக்கு இன்று வந்தது நிறைவாக உள்ளது," என்று லிட்டில் இந்தியாவுக்கு தமது நண்பர்களுடன் வந்திருந்த வினி கூறினார்.

தமிழ்நாட்டில் பொங்கல் என்றால் திருவிழாகோலம் பூண்டிருக்கும். குறிப்பாக, ஜல்லிக்கட்டு போட்டிகள் களைகட்டும். அதைப் பார்க்கமுடியாத சோகம் சில இந்திய வெளிநாட்டு ஊழியர்களுக்கு.

“பொங்கலுக்காக ஊருக்குச் சென்று ஜல்லிக்கட்டு ஆட முடியாமல் போனதால் வருத்தமாக உள்ளது. எனக்கு மிக நெருங்கிய எனது அண்ணன் ஊரில் சில பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரைப் பார்க்க முடியாது எனக்கு மிகுந்த வருத்தம். இன்று என் தம்பியுடன் கோயிலுக்கு வரமுடிந்தது எனக்கு ஆறுதலை அளிக்கின்றது. பிறந்துள்ள தை மாதம் பிரச்சினைகளுக்கு விடியலாக இருக்கும் என்று நம்புகிறேன்,” என்று தமிழ் முரசியட் பகிர்ந்துகொண்டார் இந்தியாவிலிருந்து வந்து இங்கு வேலை பார்க்கும் அழகேசன் ராம்குமார்.

பிரச்சினைகள் தீரும், விடியல் கூடியவிரைவில் பிறக்கும் என்ற உற்சாகத்துடன் பொங்கலைக் கொண்டாடினர் பல வெளிநாட்டு ஊழியர்கள்.

“சென்ற ஆண்டைவிட இவ்வாண்டு பொங்கல் சிறப்பாக உள்ளது. லிட்டில் இந்தியா மிக அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. எனது தங்கை இவ்வாண்டு பட்டப்படிப்பை முடிக்கவிருக்கிறார். அவரது திருமணம் கூடிய விரைவில் நடக்கவுள்ளது. இந்த ஆண்டில் அச்சமயத்திலாவது குடும்பத்தோடு இருப்பேன் என நம்புகிறேன்,” என்று தமது பேரவாவைப் பகிர்ந்தார் ராஜேந்திரன்.

செய்தி, படம்: விஷ்ணு வர்தினி ஆனந்தன், மாணவ செய்தியாளர்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!