பிரதமர் லீயின் தைப்பொங்கல் வாழ்த்து; மற்ற அரசியல் தலைவர்களும் வாழ்த்து கூறினர்

பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பிரதமர் லீ சியன் லூங்கும் வேறு பல அரசியல் தலைவர்களும் தங்கள் சமூக ஊடகப் பக்கங்களில் சிங்கப்பூரர்களுக்குத் தங்கள் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். 

"பொங்கலோ பொங்கல்!" என்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட திரு லீ, இன்று (ஜனவரி 14) பொங்கல் திருவிழாவின் முதல் நாள் என்றார். 

பொங்கல் தமிழ்ச் சமூகம்  கொண்டாடும் ஓர் அறுவடைத் விழா என்று இதைக் குறிப்பிட்ட அவர், விழாவின் முக்கியத்துவம் பற்றி விளக்கினார். 

கொவிட்-19 தொற்றால் கொண்டாட்டங்கள் பாதிக்கப்பட்டாலும் நிலைமை மேம்பட்டுள்ளது என்று திரு லீ சொன்னார். 

பொங்கல் திருவிழாவை முன்னிட்டு இந்திய மரபுடைமை நிலையம் இந்த வாரயிறுதியில் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளதையும் பிரதமர் சுட்டினார். 

 அனைவரும் தெரிந்துகொள்ளவும் பங்கேற்கவும் நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார். 

"இக்காலத்தில் நம்பிக்கை, வாழ்த்து, வளம் பொங்கட்டும்!" என்று கூறி பிரதமர் தமது வாழ்த்துகளை நிறைவு செய்தார்.  

 

 

திரு லீயைத் தவிர இன்னும் சில அரசியல் தலைவர்களும் தங்கள் பொங்கல் நல்வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டனர். 

பொங்கலோ பொங்கல் என்று கூறி தமது வாழ்த்துகளைப் பகிர்ந்தார் போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன். 

பொங்கல் என்ற சொல் குறிப்பவற்றை  அவர் விளக்கினார். 

"இன்று நான்கு நாள் நீடிக்கும் பொங்கல் திருவிழாவின் தொடக்கம். இன்றுதான் மங்கலத் தைமாதமும் தொடங்குகிறது. விழாவில் படைக்கப்படும் அரிசி உணவின் பெயரும் பொங்கல்தான்.  பாலும் வெல்லமும் இதில் இடப்படுகிறது. பால் பொங்கி வழிவது, வளம் பொங்கி வழிவதைக்  குறிக்கிறது," என்றார் திரு ஈஸ்வரன்.  

நேற்றே தமது பொங்கல் நல்வாழ்த்துகளைப் பகிர்ந்த துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், பொங்கலை முன்னிட்டு கூடுதல் நடவடிக்கைகள் நடைபெற முடிவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். 

பொங்கல் பற்றி விவரித்த அவர், மாட்டுப் பொங்கலைப் பற்றி குறிப்பிட்டார். 

லிட்டில் இந்தியாவில் ஆடு மாடுகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதைப் பொதுமக்கள் பார்க்கலாம் என்று திரு ஹெங் சொன்னார்.  

இந்திய மரபுடைமை நிலையத்தின் நிகழ்ச்சிகளின்  நிகழ்ச்சிகள் பற்றி \தெரிந்துகொள்ளும்படி அவர் பொதுமக்களை ஊக்குவித்தார். 

 

பாட்டாளிக் கட்சித் தலைவர் ப்ரித்தம் சிங்கும் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் சிங்கப்பூர் தமிழர்களுக்குப் பொங்கல் வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் குடும்பத்துடன் லிட்டில் இந்தியா சென்று மாடுகளின் காட்சியைப் பார்த்ததை நினைவுகூர்ந்தார்.

சிராங்கூன் சாலையில் உணவு உண்டதையும் குறிப்பாக செட்டிநாடு உணவுமீது தமக்கிருக்கும் பெரும் விருப்பத்தையும் திரு ப்ரித்தம் பகிர்ந்தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!