புத்துயிர் பெறும் வான்வெளித் துறை

சிங்­கப்­பூ­ரில் உள்ள பல முக்­கிய வான்­வெ­ளித் துறை நிறு­வ­னங்­கள், இவ்­வாண்டு கூடு­தல் ஊழி­யர்­களை வேலை­யில் அமர்த்த திட்­ட­மிட்­டுள்­ளன.

கொவிட்-19 நெருக்­க­டி­நிலை கார­ண­மாக வெகு­வா­கப் பாதிக்­கப்­பட்ட விமா­னப் போக்­கு­வ­ரத்­துத் துறை மீண்­டும் படிப்­ப­டி­யாக மீண்டு வரு­வதை ஸ்ட்­ரெய்ட்ஸ டைம்ஸ் நாளி­த­ழி­டம் இந்த நிறு­வ­னங்­கள் சுட்­டின.

தற்­போது கூடு­தல் விமா­னங்­களை வானத்­தில் பார்க்க முடி­கிறது என்று அவை குறிப்­பிட்­டன.

விமா­னப் போக்­கு­வ­ரத்­துத் துறை­யில் நீண்டகால வாய்ப்­பு­கள் மீண்­டும் மலர்­வ­தற்­கான சாத்­தி­யம் அதி­கம் இருப்­ப­தாக வான்­வெ­ளித் துறை நிறு­வ­னங்­கள்

நம்­பிக்கை தெரி­வித்­தன.

விமா­னப் போக்­கு­வ­ரத்­துத் துறை மேம்­பட்­டால் அத­னு­டன் நெருங்­கிய தொடர்­புள்ள வான்­வெ­ளித் துறை­யும் பல­ன­டை­யும்.

விமா­னங்­களை உற்­பத்தி செய்­வது, அவற்­றைப் பழு­து­பார்ப்­பது, பரா­ம­ரிப்­பது முத­லி­யவை வான்­வெ­ளித் துறை­யின் பொறுப்­பா­கும்.

இவ்­வாண்டு 400க்கும் மேற்­பட்ட ஊழி­யர்­களை வேலை­யில் அமர்த்­த­வி­ருப்­ப­தாக ஜிஇ

விமா­னப் போக்­குவ­ரத்து இயந்­

தி­ரச் சேவை­கள் சிங்­கப்­பூர் எனும் வான்­வெ­ளித் துறை நிறு­வ­னம் தெரி­வித்­தது.

மின்­னி­லக்­கம், இயந்­தி­ர­வி­யல், உயர் தொழில்­நுட்ப ஆய்வு, நீடித்த நிலைத்­தன்மை முத­லி­ய­வற்­றில் அனு­ப­வ­முள்ள பொறி­யா­ளர்­களும் தொழில்­நுட்­பர்­களும் வேலைக்கு எடுக்­கப்­ப­டு­வர் என்று அந்­நி­று­

வ­னம் கூறி­யது.

அந்த நிறு­வ­னத்­தில் ஏற்­

கெ­னவே 1,700 பொறி­யா­ளர்­கள், தொழில்­நுட்­பர்­கள், நிபு­ணர்­கள் பணி­பு­ரி­கின்­ற­னர்.

வான்­வெ­ளித் துறை­யின் நிலை இவ்­வாண்டு மேம்­படும் என்­ப­தில் நம்­பிக்­கை­யு­டன் இருப்­ப­தாக அந்­நி­று­வ­னத்­தின் நிர்­வாக இயக்­கு­நர் திரு இயன் ரோஜர் கூறி­னார்.

பய­ணி­க­ளுக்கு மீண்­டும் சேவை வழங்­கும் விமா­னங்­க­ளின் எண்­ணிக்கை உயர்ந்­தி­ருப்­ப­தாக அவர் தெரி­வித்­தார்.

3,000க்கும் மேற்­பட்ட ஊழி­யர்­

க­ளைக் கொண்ட எஸ்டி எஞ்­ஜி னி­ய­ரிங்­கின் வர்த்­தக வான்­

வெ­ளிப் பிரிவு, இவ்­வாண்டு மேலும் 200 பேரை வேலை­யில் அமர்த்த இருக்­கிறது.

விமா­னத் தொழில்­நுட்­பர்­கள், ஆய்­வா­ளர்­கள், தர­வுப் பகுப்­பா­ளர்­கள் ஆகி­யோர் தேவைப்­ப­டு­வ­தாக அந்­நி­று­வ­னம் கூறி­யது.

"விமா­னப் போக்­கு­வ­ரத்­துத் துறை படிப்­ப­டி­யாக வழக்­க­நி­லைக்­குத் திரும்­பும்­போது வான்­வெ­ளித் துறை நிறு­வ­னம் என்­கிற முறை­யில் அவற்­றுக்குத் தேவை­யான ஆத­ரவை வழங்க விரும்­பு­கி­றோம். இதன் கார­ண­மாக மனி­த­வ­ளத்­துக்கு முக்­கி­யத்­து­வம் கொடுத்து அதில் கவ­னம் செலுத்­து­கி­றோம்," என்று எஸ்டி எஞ்­ஜி­னி­ய­ரிங்­கின் வர்த்­தக வான்­வெ­ளிப் பிரி­வின் தலை­வர் திரு ஜெஃப்ரி லாம் தெரி­வித்­தார்.

ஏர்­பஸ், போயிங், ரோல்ஸ் ராய்ஸ் போன்ற வான்­வெ­ளித் துறை நிறு­வ­னங்­களும் வேலைக்கு ஆட்­களை எடுக்­கும் பணி­களை முடுக்­கி­வி­டத் திட்­டம் வைத்­

தி­ருப்­ப­தா­கக் கூறின.

ஆண்­டாண்டு கால­மாக உல­க­ளா­விய நிலை­யில் விமா­னப் பரா­

ம­ரிப்பு, பழு­து­பார்ப்பு, இயந்திர மாற்றியமைத்தல் ஆகி­ய­வற்­றில் சிங்­கப்­பூ­ரின் பங்­க­ளிப்பு அதி­கம் என்று பொரு­ளி­யல் மேம்­பாட்­டுக் கழ­கம் தெரி­வித்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!