வார இறுதியில் இயங்கும் ஆறு பலதுறை மருந்தகங்கள்

இந்த வார­மும் அடுத்த வார­மும் ஆறு பல­துறை மருந்­த­கங்­கள் வார இறுதி நாள்­க­ளி­லும் இயங்­கும். இவை, புக்­கிட் பாஞ்­சாங், யூனோஸ், காலாங், பைனி­யர், பொங்­கோல். உட்­லண்ட்ஸ் பல­துறை மருந்­த­கங்­கள் ஆகியவை ஆகும்.

சிங்­கப்­பூ­ர் எதிர்நோக்கும் சவாலான கொவிட்-19 கிருமிப் பர­வல் சூழ­லைக் கையாள இந்­ந­ட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கிறது என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

கூடு­தல் நேரம் இயங்­கும் இந்த ஆறு பல­துறை மருந்­த­கங்­களும் மோச­மான சுவா­சப் பிரச்­சி­னை­கள் ஏற்­ப­டு­வ­தற்­கான அறி­கு­றி­கள் இருப்­போரை மட்­டும்­தான் கவ­னிக்­கும். காய்ச்­சல், இரு­மல், சளிக்­காய்ச்­சல் உள்­ளிட்ட அறி­கு­றி­கள் இவற்­றில் அடங்­கும்.

இந்த அறி­கு­றி­க­ளின்றி இதர பிரச்­சி­னை­கள் இருப்­போர் பொது மருந்­த­கங்­க­ளுக்­குச் செல்­லு­மாறு கேட்­டுக்­கொள்­ளப்­ப­டு­வ­தாக சுகா­தார அமைச்சு கூறி­யது.

'பிஹெச்­பிசி' எனும் பொது சுகா­தார ஆயத்­த­நிலை மருந்­த­கங்­கள் சில­வற்­றின் மருத்­து­வர்­கள் தங்­களின் ஊழி­யர்­க­ளைக் கூடு­தல் நேரம் பணி­யில் ஈடு­ப­டுத்தி வரு­கின்­ற­னர். சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் துறை எதிர்­நோக்­கும் சுமை­யைக் குறைக்க சில 'பிஹெச்­பிசி' மருத்துவர்­கள் கூடு­த­லா­னோரை வேலைக்­கும் எடுக்­கின்­ற­னர்.

சிங்கப்பூர் முழுவதும் சில 'பிஹெச்பிசி' மருந்தகங்கள் வார நாள்களில் இரவு 11 மணிவரை இயங்கும். வார இறுதி நாள்களில் அவை பிற்பகல் இரண்டிலிருந்து ஐந்து மணிவரை இயங்கும். ேநற்று நடை­மு­றைக்கு வந்த இந்த மாற்­றங்­கள் அடுத்த மாதம் 10ஆம் தேதி­வரை நடப்­பில் இருக்­கும்.

கூடு­தல் நேரம் இயங்­கும் 'பிஹெச்­பிசி' மருந்­த­கங்­கள், பல­துறை மருந்­த­கங்­கள் ஆகி­ய­வற்­றைப் பற்­றிய விவ­ரங்­களை https://flu.gowhere.gov.sg/ இணை­யத்­தளத்­தில் தெரிந்­து­கொள்­ள­லாம்.

மருத்­துவ உதவி தேவைப்­படுவோரை முத­லில் அடிப்­படை சிகிச்சை வழங்­கும் மருத்­து­வர்­களை நாடு­மாறு சுகா­தார அமைச்சு கேட்டுக்­கொள்­கிறது.

அவ­சர சிகிச்சை தேவைப்­பட்­டால் மட்­டுமே மருத்­து­வ­ம­னை­களின் அவ­சர சிகிச்­சைப் பிரி­வு­களுக்­குச் செல்­லு­மாறு அமைச்சு மக்களிடம் கூறி­யது.

"உடல்­ந­லம் சரி­யில்­லா­தோர் மட்­டும் மருத்­துவ உத­வியை நாடு­மாறு கேட்­டுக்­கொள்­கி­றோம். கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்கு ஆளான நோய்க்­கான அறி­கு­றி­கள் இல்­லா­த­வர்­கள், மோச­மாக நோய்­வாய்ப்­படா­த­வர்­கள் ஆகி­யோர் இரண்­டாம் பிரிவு வழி­மு­றை­க­ளின்­படி வீட்­டில் இருந்­த­படி தங்­களை கவ­னித்­துக்­கொள்­ள­லாம்," என்று அமைச்சு குறிப்­பிட்­டது.

இரண்­டாம் பிரிவு வழி­மு­றை­களின்­கீழ் கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­வோர் முத­லில் 72 மணி­நேரத்­திற்கு வீட்­டில் தங்­களை தனிமைப்­படுத்­திக்­கொள்­ள­லாம். அதற்­குப் பிறகு அவர்­கள் 'ஏஆர்டி' பரி­சோதனையை மேற்­கொள்­ள­வேண்­டும். பரிசோதனையில் குண­ம­டைந்­தது உறு­தி­யான பிறகு நோயா­ளி­கள் தங்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்­ளத் தேவை­யில்லை.

"அதி­கம் தேவைப்­ப­டு­வோ­ருக்கு நமது மருத்­துவ வளங்­கள் பயன்­படு­வதை உறு­தி­செய்ய அனை­வரின் தொடர் முயற்­சி­யும் ஒத்­து­ழைப்­பும் எங்­க­ளுக்­குத் தேவை," என்று சுகா­தார அமைச்சு வலி­யு­றுத்­தி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!