கொவிட்-19 போராட்டத்தில் திருப்புமுனையை எட்டியுள்ளோம்

கொவிட்-19 கிரு­மி­யு­டன் போரா­டு­வ­தில் முக்­கிய திருப்­பு­மு­னையை எட்­டி­யி­ருப்­ப­தால் சிங்­கப்­பூர் அதன் கட்­டுப்­பா­டு­க­ளைக் கணி­ச­

மா­கத் தளர்த்­தும் என்று பிர­த­மர் லீ சியன் லூங் கூறி­னார்.

மாற்­றங்­கள் அறி­விக்­கப்­பட்­டா­லும் சிங்­கப்­பூர் கவ­னத்­து­ட­னான அணு­கு­மு­றை­யைப் பின்­பற்­றும் என்­றார். கட்­டுப்­பா­டு­களை அதி­க­மாக அல்­லது முழு­மை­யா­கத் தளர்த்தி சுதந்­திர அணு­கு­மு­றை­யைக் கடைப்­பி­டித்த நாடு­கள் கொவிட்-19 தொற்­றுச் சம்­ப­வங்­கள் அதி­க­ரிப்­பை­யும் இறப்­பு­கள் கூடி­ய­தை­யும் கண்­டி­ருப்­ப­தாக அவர் நினை­வூட்­டி­னார்.

"கொள்­ளை­நோய் ஒழிந்­து­விட்­ட­தாக அவர்­கள் அறி­வித்­த­னர். எல்­லா­வி­த­மான கட்­டுப்­பா­டு­க­ளை­யும் ஒரே­ய­டி­யாக நீக்­கி­னார்­கள். ஆனால், அதன் பிறகு தொற்­றுச் சம்­ப­வங்­களும் மரண எண்­ணிக்­கை­யும் வேக­மாக அதி­க­ரிப்­பதை அவர்­கள் கவ­லை­ யு­டன் கண்டுவரு­கி­றார்­கள்.

"ஆனால், நாம் கவ­னத்­து­டன் படிப்­ப­டி­யாக அடி­யெ­டுத்து வைக்­கும் அணு­கு­

மு­றை­யைப் பின்­பற்­றி­னோம். ஈராண்­டு­க­ளாக அவை நமக்கு நல்ல பல­னைத் தந்­துள்­ளன.

"அதி­க­மான ஒன்­று­கூ­டல்­க­ளால் நாமும் இன்­னொரு கிரு­மிப் பர­வல் அலை­யைச் சந்­திக்­கக்கூடும். ஓமிக்­ரான்தான் நாம் எதிர்­கொண்ட கடைசி கிருமி வகை என்று எண்­ணி­வி­டக் கூடாது.

"புதிய வகைக் கிருமி படிப்­ப­டி­யாக அபா­யம் குறைந்­த­தா­க­வும் சளிக்­காய்ச்­சலை ஏற்­ப­டுத்­து­வது போன்­ற­தா­க­வும் இனி இருந்­தா­லும், டெல்­டா­வைப் போல கடு­மை­யா­ன­தா­க­வும் ஆபத்­தா­ன­தா­க­வும் அது மாறு­

வ­தற்­கான சாத்­தி­யம் உள்­ளது.

"அது­போன்ற நிலை ஏற்­பட்­டால் சிங்­கப்­பூர் மீண்­டும் கட்­டுப்­பா­டு­க­ளைக் கடு­மை­யாக்­கக்கூடும். அதற்­கான அவ­சி­யம் ஏற்­

ப­டாது என்று நாம் நம்­பி­னா­லும் எது­வும் நிக­ழ­லாம் என்­பதை நாம் மறுப்­ப­தற்­கில்லை. இருப்­பி­னும், என்ன நிகழ்ந்­தா­லும் ஒவ்­வொ­ரு­வ­ரை­யும் எப்­ப­டிப் பாது­காப்­பது என்­பதை நாம் இப்­போது தெரிந்­து­வைத்­துள்­ளோம்.

"அந்த வகை­யில், இன்­னொரு பூஸ்­டர் தேவைப்­ப­ட­லாம். அல்­லது மேம்­ப­டுத்­தப்­பட்ட தடுப்­பூ­சி­யாக அது இருக்­க­லாம்.

"கொவிட்-19 தொற்­றுக்கு எதி­ரான போராட்­டத்­தில் சிங்­கப்­பூர் நீண்ட பாதை­யைக் கடந்து வந்­துள்­ளது. இருப்­பி­னும் இறு­திக்­கட்­டத்தை நாடு எட்­ட­வில்லை," என்­றார் திரு லீ.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!