வாழ்வைத் தொடங்கி வைக்கும் புத்தாண்டுக் கொண்டாட்டம்

சித்­தி­ரைப் புத்­தாண்­டை­யும் சீக்­கி­யப் புத்­தாண்­டான வைசாக்­கியை­யும் இன்று கொண்­டா­டும் ஜெய்­பால்-வீணா தம்­ப­தி­யர் தங்­க­ளது தலைப் புத்­தாண்டை நம்­பிக்­கை­யோடு வர­வேற்­கின்­ற­னர். சீக்­கி­ய­ரான விளை­யாட்­டுத்­துறை நிர்­வாகி 28 வயது ஜெய்­பால் சிங் சித்­து­வும் அவரின் மனைவியான 30 வயது ஸ்ரீவீணா சர­வ­ண­னும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதி­வுத் திரு­ம­ணம் செய்­து­கொண்­ட­போது கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் கார­ண­மாக எல்­லாரையும் அழைத்து விருந்­த­ளித்து மகிழ முடி­ய­வில்லை.

தற்­போது கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­டுள்ள நிலை­யில், தமிழ், சீக்­கிய விருந்­தோடு இன்­றைய புத்­தாண்­டைச் சிறப்­பா­கக் கொண்டாடு­கின்­ற­னர் இத்­தம்­ப­தி­யர்.

வாம்போ டிரை­வில் இவர்­கள் வாங்­கி­யுள்ள புது­வீட்­டில் முதல் கொண்­டாட்­ட­மாக புத்­தாண்டு அமை­வ­தில் இவர்­க­ளுக்­குப் பெரும் மகிழ்ச்சி.

ஆறு, ஏழு காய்­க­றி­கள் சேர்த்து சமைக்­கும் "சாக்', 'தாயா­ரின் பருப்பு' என பொருள்­படும் 'மாதி தால்' உள்­ளிட்ட பஞ்­சாபி வகை உண­வு­ வகைகளுடன் தமிழரின் கீரை வகை, பாயா­சத்­து­டன் அம்மா சரஸ், 57, மாமி­யார் மன்­ஜித் கோர், 56, இரு­வ­ரும் விருந்து தயா­ரிப்­பதா­கக் குறிப்­பிட்­டார் ஸ்ரீவீணா.

சீக்­கி­யர்­க­ளுக்குப் புத்­தாண்டு அன்று சைவ உணவு உண்­பது கட்­டா­ய­மல்ல. சித்­தி­ரைப் புத்­தாண்­டில் பல தமிழ்க் குடும்­பங்­கள் சைவ விருந்து படைப்­பார்­கள் என்­ப­தால் அவர்­கள் வீட்­டில் இன்று சைவ விருந்து.

சித்­தி­ரைப் புத்­தாண்­டன்று தமி­ழர்­கள் கோயி­லுக்­குச் செல்­வது போல் சீக்­கி­யர்­களும் தங்­க­ளது ஆல­யத்­திற்­குச் சென்ற பிறகு வீட்­டில் குடும்­பத்­தி­ன­ரு­டன் விருந்­துண்டு புத்­தாண்டு கொண்­டா­டு­வார்­கள் என்ற தம்­ப­தி­யர், இன்று கோயி­லுக்­கும் சீக்­கிய ஆல­யத்­துக்­கும் சென்று வழி­பாடு செய்­த­னர். பின்­னர் பெற்­றோ­ரின் வீட்­டுக்­குச் சென்று அவர்­க­ளி­டம் ஆசிர்­வா­தம் பெற்­றுக்­கொண்­ட­னர். பிறகு தங்­களின் புத்­தாண்­டைத் தொடங்­கி­னர். சித்­திரை மாதம் முதல் நாளைச் சித்­தி­ரைப் புத்­தாண்­டா­கத் தமி­ழர்­கள் கொண்­டா­டு­கின்­ற­னர்.

1699ஆம் ஆண்டு சீக்­கிய சமூ­க­மான கல்சா நிறு­வப்­பட்ட நாளை 'வைசாக்கி' புத்­தாண்­டாக அந்த சமூ­கம் கொண்­டா­டு­கிறது. வழக்­க­மாக வைசாக்கி ஏப்­ரல் மாதம் 13 அல்­லது 14ஆம் தேதி கொண்­டா­டப்­படும்.

சீக்­கிய குரு­மார்­க­ளை­யும் இந்து தெய்­வங்­க­ளை­யும் தங்­கள் வீட்­டில் வழி­ப­டு­வ­தா­கக் கூறிய திரு ஜெய்­பால், இந்­தப் புரிந்­து­ணர்வு தங்­களது குடும்­பத்­தி­ன­ரி­டையேயும் ஏற்­பட்­டுள்­ளது என்­று குறிப்பிட்டார். தொடக்­கத்­தில் இந்து சமய வழக்­கங்­கள் ஜெய்­பா­லின் அக்­கா­வான மீலன்­ஜித் கோரை ஆச்­சரி­யப்­ப­டுத்­தின. தமது சந்­தே­கங்­களை ஸ்ரீவீணா­வி­டம் கேட்­டுத் தெளிவு பெறு­வார்.

"நமது பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் பேண பண்டிகைகளைக் கொண்டாடுவது முக்கியம். கொண்டாட்டங்களும் சடங்குகளும் தனித்தன்மையான வழமைகளைப் பேணிக்காக்க உதவுகின்றன," என்ற ஸ்ரீவீணா, தங்களது பிள்ளைகளுக்கு இரண்டு பாரம்பரியங்களையும் சொல்லிக் வளர்க்கப்போவதாகக் கூறினார்.

"இந்து ஆல­யங்­க­ளுக்­கும் என் பிள்­ளை­களை அழைத்­துச் செல்­வேன். பிற சம­யங்­களும் மதிக்­கத்­தக்­கவை என்­பதை என் பிள்­ளை­களுக்கு உணர்த்­து­வேன்," என்­றார் திரு ஜெய்­பால் சிங்.

இவ்­வாண்­டின் டிசம்­ப­ரி­லும் அடுத்­தாண்டு ஜன­வ­ரி­யி­லும் முறையே தங்­க­ளது இந்து, சீக்­கி­யத் திரு­ம­ணங்­களை இத்­தம்­ப­தி­யி­னர் நடத்­த­வி­ருக்­கின்­ற­னர். சடங்­கு­பூர்வ திரு­ம­ணத்­திற்கு முடிந்­த­வரை உற்­றார் உற­வி­னரை அழைத்து எங்­க­ளது அன்­பைப் பகிர விரும்­பு­கி­றோம்," என்­றார் திரு ஜெய்­பால்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!