நடைமுறையை இன்று தொடங்க நிறுவனங்களுக்கு வலியுறுத்து ஊழியர் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்

சிங்­கப்­பூ­ரில் பல துறை­க­ளையும் சேர்ந்த வேலை­யி­டங்­களில் மரண விபத்­து­கள் கூடி இருக்­கின்­றன. வேலையைக் குறிப்­பிட்ட நேரம் நிறுத்­தி­விட்டு பாது­காப்பு அம்­சங்­களை உறு­திப்­ப­டுத்­தும் நடைமுறையை இன்று முதல் அமல்படுத்தும்படி நிறு­வ­னங்­கள் வலி­யு­றுத்­தப்­பட்டு இருக்­கின்­றன.

வேலை நிறுத்­தப்­படும் நேரத்­தில் நிறு­வ­னங்­கள் பாது­காப்பு நிர்­வாக முறை­களை மறு­ப­ரி­சீலனை செய்ய வேண்­டும். கடந்­த­கால விபத்­து­களில் இருந்து பாடம் கற்­க­வேண்­டும் என்று மனி­த­வள அமைச்­சும், வேலை இடப் பாது­காப்பு சுகா­தார மன்­றம், தேசிய தொழிற்­சங்க காங்­கி­ரஸ் ஆகிய அமைப்­பு­களும் தொழில்­துறைப் பங்­கா­ளி­களும் கூட்­ட­றிக்கையில் வலி­யு­றுத்­தின.

சென்ற மாதம் வேலை­யி­டங்­களில் 10 உயிர்­பலி விபத்­து­கள் நிகழ்ந்­தன. அவற்­றை­யும் சேர்த்து இந்த ஆண்­டில் வேலை­யி­டங்­களில் 20 பேர் மாண்டுவிட்டனர்.

2016க்குப் பிறகு இதே கால­கட்­டத்­தில் இந்த அள­வுக்கு எந்த ஓர் ஆண்­டி­லும் வேலை­யிட மரணங்­கள் நிகழ்ந்­த­தில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

வேலையைக் குறிப்­பிட்ட நேரம் நிறுத்­தி­விட்டு வேலை­யி­டங்­களில் ஊழி­யர்­க­ளை­யும் தொழிற்­சங்­கங்­க­ளை­யும் வேலை­யி­டப் பாது­காப்பு, சுகா­தார நடை­மு­றை­களில் ஈடு­ப­டுத்த மூத்த நிர்­வா­கத்­தி­னர் முயற்­சி­களை மேற்­கொள்­வார்­கள்.

கண்­டு­பி­டிக்­கக்­கூ­டிய குறை­பா­டு­க­ளுக்கு அல்­லது பிரச்­சினை­க­ளுக்கு அவர்­கள் தீர்­வு­காண முயல்­வார்­கள்.

இடர்­களை மதிப்­பி­டும் நடை­மு­றை­க­ளை­யும் நிறு­வ­னங்­கள் மறு­ப­ரி­சீ­லனை செய்ய வேண்­டும்.

ஊழி­யர்­கள் தாங்­கள் பார்க்­கும் வேலைக்கு ஏற்ற வேலையிடப் பாது­காப்பு, சுகா­தா­ரப் பயிற்சி­களைப் பெற்று இருக்­கி­றார்­கள் என்­ப­தை­யும் ஆபத்­து­க­ளைத் தவிர்த்­துக்கொள்­ளும் வகை­யில் அவர்­கள் வேலை பார்க்­கி­றார்­கள் என்­ப­தை­யும் நிறு­வ­னங்­கள் உறு­திப்­ப­டுத்த வேண்­டும்.

அண்­மைய உயிர்­பலி விபத்து­களில் இருந்து கற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய பாடங்­களை ஊழி­யர்­களுக்கு நிறு­வ­னங்­கள் விளக்க வேண்­டும். அத்­த­கைய விபத்­து­கள் மீண்­டும் நிக­ழா­மல் இருக்க எப்­படி நடந்­து­கொள்ளலாம் என்­பதை ஊழி­யர்­க­ளுக்கு நிறு­வ­னங்­கள் போதிக்க வேண்­டும்.

குறிப்­பிட்ட நேரத்­துக்கு வேலையை நிறுத்­தி­விட்டு பாது­காப்பு அம்­சங்­களில் கவ­னம் செலுத்­தும் நடை­முறை இரண்டு வாரங்­க­ளுக்கு நீடிக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

அந்த நடை­முறை, உய­ர­மான இடங்­களில் பாது­காப்­பாக ஊழி­யர்­கள் வேலை பார்ப்­பது, பாரந்­தூக்கி போன்ற சாத­னங்­க­ளைப் பாது­காப்­பா­கப் பயன்­ப­டுத்­து­வது ஆகிய இரண்டு அம்­சங்­களில் ஒரு­மித்த கவ­னம் செலுத்­தும்.

அந்த நடை­மு­றை­யில் ஏழு தொழில்­துறைச் சங்­கங்­கள் பங்­கெ­டுக்­கும் என்­றும் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

அந்த ­முறை அமல்படுத்தப்பட்ட பிறகு அதி­லி­ருந்து தெரி­ய­வந்தவை குறித்து ஊழி­யர்­களுக்கு விளக்­கம் அளிக்­கப்­படும் என்றும் மேம்­பா­டு­கள் நடை­முறைப்­படுத்­தப்­படும் என்றும் தெரி விக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!