இலங்கை பொருளியல் மீட்சி: ரணிலுக்கு கட்சிகள் ஆதரவு

இலங்­கை­யின் புதிய பிர­த­ம­ராகப் பதவி ஏற்­றுள்ள ரணில் விக்­ர­ம­சிங்கே நேற்று தனது புதிய அமைச்­ச­ர­வையை அமைத்தார்.

ஆனால் பெரு­ம்பா­லான எதிர்க்­கட்­சி­கள் அர­சாங்­கத்­தில் சேரப் போவ­தில்லை என்று அறி­வித்­து­விட்­டன. அதே நேரத்­தில் பிர­த­ம­ரின் பொரு­ளி­யல் மீட்­சித் திட்­டத்­திற்­குத் தாங்­கள் ஆத­ரவு தரப் போவ­தா­க­வும் அவை தெரி­வித்­தன.

இருந்­தா­லும் தனது அமைச்­ச­ர­வை­யில் நான்கு அமைச்­சர்­களை நேற்று ரணில் நிய­மித்­த­தாக ஊடகத் தக­வல்­கள் கூறின.

புதிய பிர­த­ம­ருக்கு முக்­கி­ய­மான இரண்டு எதிர்க்­கட்­சி­கள் ஆத­ரவு அளித்­தன. முக்­கிய எதிர்க்­கட்­சி­யான எஸ்­ஜேபி கட்சி உட­ன­டி­யாக அதி­பர் பதவி விலக வேண்­டும் என்ற தனது கோரிக்­கையைக் கைவிட்­ட­தா­கத் தெரி­ய­வந்­தது.

பொரு­ளி­யல் நெருக்­க­டி­யில் இருந்து நாட்டைக் காப்­பது இப்­போதைக்கு மிக முக்­கி­யம் என்று அந்­தக் கட்சி ஓர் அறிக்­கை­யில் தெரி­வித்­தது. அதே­போல, இலங்கை சுதந்­திரா கட்சி அமைச்­ச­ர­வை­யில் தான் சேரப்­போ­வ­தாக அறி­வித்­தது.

ரணில் விக்­ர­ம­சிங்கே ஐக்­கிய தேசிய கட்­சி­யைச் சேர்ந்­த­வர். பதவி ஏற்­றுக்­கொண்ட நான்கு அமைச்­சர்­களும் அதி­ப­ரின் அர­சியல் கட்­சி­யைச் சேர்ந்­த­வர்­கள்.

என்­றா­லும் நிதி அமைச்­ச­ராக நேற்று யாரும் பொறுப்­பேற்­க­வில்லை. இலங்­கை­யின் பொரு­ளி­யல் பிரச்­சி­னைக்குத் தீர்­வு­கா­ணும் முயற்­சி­யாக அந்த நாடு அனைத்­து­லக பண நிதி­யத்­து­டன் பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­கிறது.

இந்­நி­லை­யில் விசா­க தினத்­தை­யொட்டி அகற்­றப்­பட்டு இருந்த ஊர­டங்கு நேற்று இரவு 8மணி முதல் மீண்­டும் நடப்­புக்கு வரும் என்­றும் அது இன்று அதி­காலை 5 மணி வரை நடப்­பில் இருக்­கும் என்றும் நேற்று அறி­விக்­கப்­பட்­டது.

இலங்கை வர­வாறு காணாத பொரு­ளி­யல் நெருக்­க­டி­யைச் சந்­தித்து வரு­கிறது. ராஜ­பக்சே குடும்­பத்­தி­னர் பதவி விலக வேண்­டும் என்று மக்­கள் போராடி வந்­த­னர்.

இந்­நி­லை­யில் முன்­னாள் பிர­த­ம­ரான மகிந்த ராஜ­பக்சே ஆத­ர­வா­ளர்­கள் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளைத் தாக்­கி­ய­தா­கக் கூறப்­பட்­டதை அடுத்து வன்­செ­யல் வெடித்­தது.

கடை­சி­யில் பிர­த­மர் பொறுப்­பில் இருந்து மகிந்த ராஜ­பக்சே வில­கி­விட்­டார். ரணில் பிர­தம­ராக பொறுப்பு ஏற்­றுக் கொண்­டுள்­ளார்.

என்­றா­லும் அதி­பர் கோத்­த­பாய ராஜ­பக்­சே­வும் பதவி விலக வேண்டும் என்­றும் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்களைத் தாக்­கி­ய­வர்­க­ளைக் கைது செய்­ய­வேண்­டும் என்­றும் கேட்டு மக்­கள் குரல் கொடுத்து­வருகிறார்­கள்.

ஆயி­ரக்­க­ணக்­கான ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் அதி­பர் ராஜ­பக்சே அலு­வ­ல­கத்­துக்கு வெளியே நேற்­றும் தொடர்ந்து ஆர்ப்­பாட்­டம் நடத்­தி­னர். வன்­செ­யல்­கள் தொடர்­பில் காவல்­துறை ஏற்­கெ­னவே ஏறக்­குறைய 300 பேரைக் கைது­செய்­துள்­ளது.

இவ்­வே­ளை­யில், இலங்கை அர­ச­மைப்­புச் சட்­டத்­தின் 21வது திருத்­தம் பற்றி நேற்று தலை­மைச் சட்ட அலு­வலக அதி­கா­ரி­யு­டன் விவா­திக்­கப்­பட இருந்­த­தாக ரணில் முன்­ன­தாக தெரி­வித்து இருந்­தார். அந்­தத் திருத்­தம் அதி­ப­ரின் அதி­கா­ரங்­களைக் குறைக்­கிறது.

தலை­மைச் சட்ட அதி­கா­ரி­யு­டன் விவா­தித்­த­தற்­குப் பிறகு அங்­கீ­காரத்­திற்­காக அமைச்­ச­ர­வை­யி­டம் அது தாக்­கல் செய்­யப்­படும் என்­றும் ரணில் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!