சென்னை: சப்பாத்தி கேட்டதால் எழுந்த சண்டையில் லாரியை ஏற்றி நண்பர்கள் இருவர் கொலை

சப்­பாத்தி கேட்­ட­தால் எழுந்த தக­ராற்­றில் லாரியை ஏற்றி இரு­வர் படு­கொலை செய்­யப்­பட்ட சம்­ப­வம் சென்­னை­யில் நிகழ்ந்­துள்ளது. இதன் தொடர்­பில் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இரு­வர் கைது­செய்­யப்­பட்­ட­னர்.

சென்னை புற­ந­கர்ப் பகு­தி­யான வட­பெ­ரும்­பாக்­கம் நெடுஞ்­சா­லைப் பகு­தி­யில் வாக­னங்­களை வாட­கைக்கு நிறுத்­து­மி­டம் ஒன்று செயல்­பட்டு வரு­கிறது.

இந்­நி­லை­யில், கடந்த புதன்­கிழமை இரவு செங்­குன்­றம் பகு­தி­யைச் சேர்ந்த கம­லக்­கண்­ணன், 36, கும­ரன், 34, நவீன், 36 ஆகிய மூவ­ரும் நேற்று முன்­தி­னம் இரவு மோட்­டார்­சைக்­கி­ளில் அந்த வாகன நிறுத்­து­மி­டத்­திற்­குச் சென்­ற­னர்.

பின்­னர் அவர்­கள் மூவ­ரும் அங்கு நிறுத்­தப்­பட்டிருந்த வட­மாநில லாரி ஒன்­றின் பின்­னால் அமர்ந்து மது அருந்­தி­ய­தா­கக் கூறப்­பட்­டது.

அந்த லாரி­யின் ஓட்­டு­ந­ரான கன்­னையா லால் சிங் என்­ப­வ­ரும் உத­வி­யா­ள­ரான கிரீஷ் குமார் என்­ப­வ­ரும் அரு­கில் சப்­பாத்தி சமைத்து, சாப்­பிட்­டுக் கொண்­டி­ருந்­த­னர்.

மது அருந்­திய மூவ­ரும் அவர்­களி­டம் சென்று சப்­பாத்தி கேட்­டனர். தங்­க­ளி­டம் வேறு உணவு இல்லை என்று கன்­னை­யா­வும் கிரீ­ஷும் கூறி­ய­தால், நண்­பர்­கள் மூவ­ரும் சேர்ந்து அவர்­க­ளைத் தாக்­கி­ய­தா­கச் சொல்­லப்­ப­டு­கிறது.

அதன்­பின்­னர் அம்­மூ­வ­ரும் மீண்­டும் அந்த லாரி­யின் பின்­பு­றம் அமர்ந்து மது அருந்­தி­னர்.

தங்­க­ளைத் தாக்­கி­ய­தால் ஆத்­தி­ர­ம­டைந்த கன்­னையா, லாரி­யில் ஏறி, அதை வேக­மா­கப்­பின்­னோக்கி இயக்­கி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இதனால், லாரியின் பின்சக்கரம் ஏறியதில், பின்னால் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்த நண்பர்கள் மூவரும் படுகாயமுற்றனர்.

இதில் கமலக்கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட வழியிலேயே குமரனும் உயிரிழந்தார். கவலைக்கிடமான நிலையில் இருக்கும் நவீனுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நண்பர்கள் மூவர்மீதும் லாரியை ஏற்றியபின், அதனைச் சிறிது தூரம் ஓட்டிச் சென்று நிறுத்திவிட்டு ஓட்டுநர் கன்னையாவும் உதவியாளர் கிரீஷும் தப்பியோடினர்.

தக­வ­ல­றிந்­த­தும் அப்­ப­கு­தி­யைச் சேர்ந்த நூற்­றுக்­கும் மேற்­பட்­டோர் சம்­பவ இடத்­தில் திரண்­ட­னர். அங்­கி­ருந்த சில வட­மா­நி­லப் பதி­வெண் கொண்ட லாரி­க­ளின் கண்­ணா­டி­களை அவர்­கள் அடித்து நொறுக்­கி­ய­தால் அங்கு பதற்­ற­மான சூழல் நில­வி­யது.

இத­னை­ய­டுத்து, சம்­பவ இடத்­தில் ஐம்­ப­துக்­கும் மேற்­பட்ட காவல்­து­றை­யி­னர் குவிக்­கப்­பட்டு, அவ்­வி­டத்­தி­லி­ருந்து பொது­மக்­கள் அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்­ட­னர்.

பின்­னர் தப்­பி­யோ­டிய கன்­னை­யா­வை­யும் கிரீ­ஷை­யும் கைது­செய்து, காவல்­து­றை­யி­னர் விசா­ரித்து வரு­கின்­ற­னர்.

உயி­ரி­ழந்த கம­லக்­கண்­ண­னும் கும­ர­னும் பள்­ளிக்­கா­லம் முதல் நண்­பர்­க­ளாய் இருந்து, ஒன்­றாய்த் தொழில் செய்து வந்தனர்.

தமிழ்­நாட்­டில் வட­இந்தியர்கள் தொடர்புடைய குற்­றச்­செ­யல்­கள் அதி­க­ரித்து வரு­வது அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!