‘உறைந்த, குளிரூட்டப்பட்ட கூடுதல் கோழிகளை எதிர்பார்க்கலாம்’

ஆஸ்­தி­ரே­லியா, தாய்­லாந்து ஆகிய நாடு­க­ளி­லி­ருந்து குளி­ரூட்­டப்­பட்ட கோழி­களும் பிரே­சில், அமெ­ரிக்கா போன்ற நாடு­க­ளி­லி­ருந்து உறைந்த கோழி­களும் அடுத்த சில வாரங்­களில் சிங்­கப்­பூ­ருக்கு அனுப்­பி­வைக்­கப்­படும் என்று நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற துணை அமைச்­சர் டெஸ்­மண்ட் டான் தெரி­வித்­துள்­ளார்.

உள்­ளூர் உணவு விநி­யோ­கிப்­பு நிறு­வ­னம் ஒன்று தாய்­லாந்­தி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யும் கோழி­க­ளின் எண்­ணிக்­கையை பத்து மடங்கு அதி­க­ரித்­துள்­ள­தாக அவர் கூறி­னார்.

கோழி இறைச்சி ஏற்­று­ம­திக்கு மலே­சியா தற்­கா­லி­கத் தடை விதித்­துள்­ளது. இந்­தத் தடை கடந்த புதன்­கி­ழமை தொடங்­கி­யது. சிங்­கப்­பூ­ருக்கு கோழி­கள் அனுப்­பப்­

ப­டு­வதை மலே­சியா நிறுத்­தி­யுள்­ள­போ­தி­லும் சிங்­கப்­பூ­ரில் கோழி­

விநி­யோ­கம் சீராக இருப்­ப­தாக திரு டான் கூறினார்.

சிங்­கப்­பூர் இறக்­கு­மதி செய்­யும் கோழி­களில் மூன்­றில் ஒரு பங்கு மலே­சி­யா­வி­லி­ருந்து வரு­கிறது. மலே­சி­யா­வி­லி­ருந்து பெரும்­பா­லான கோழி­கள் சிங்­கப்­பூ­ருக்கு

உயி­ரு­டன் கொண்டுவரப்­பட்டு இங்கு அறுக்­கப்­பட்­டுக் குளி­ரூட்­டப்­ப­டு­வது வழக்­கம்.

"வழக்­கம்­போல் வாங்­கும் அள­வையே வாங்­கி­னால் அனை­வ­ருக்­கும் போது­மான கோழி கிடைக்­கும் என்று உறுதி அளிக்­கி­றோம்," என்று தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் திரு டான் பதி­விட்­டார்.

நேற்று காலை சில பேரங்­

கா­டி­க­ளுக்­குச் சென்­றி­ருந்­தா­கவும் அங்கு போது­மான அள­வில் கோழி­கள் இருந்­த­தா­க­வும் திரு டான் கூறி­னார்.

உண­வுப்­பொ­ருள்­கள் இடை­யூறு­ க­ளால் சிங்­கப்­பூர் அவ்­வப்­போது பாதிப்­ப­டை­யும் என்­றும் அவர் தெரி­வித்­தார்.

"இந்த இடை­யூ­று­க­ளுக்கு நம்­மால் முழு­மை­யா­கத் தீர்வு காண முடி­யா­விட்­டா­லும் ஒன்­றி­ணைந்து செயல்­பட்­டால் அவற்­றைக் கடந்து செல்­லலாம் என்ற நம்­பிக்கை உள்­ளது," என்­றார் திரு டான்.

சிங்­கப்­பூர் உணவு அமைப்புடன்­

கோழி­களை ஏற்­று­மதி செய்­யும் நிறு­வ­னங்­கள், விநி­யோ­கிப்­

பா­ளர்­கள், பேரங்­கா­டி­கள் இணைந்து செயல்­பட்டு உட­னடி நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­ட­தால் சிங்­கப்­பூ­ரில் கோழி­க­ளின் விநி­யோ­கம் போது­மான அள­வில் உள்­ள­தாக அவர் பாராட்­டி­னார்.

இதற்­கி­டையே, கடந்த இரண்டு மாதங்­களில் சிங்­கப்­பூ­ரில் கோழி­

க­ளின் விலை அதி­க­ரித்­தி­ருப்­ப­தாக புள்­ளி­வி­வ­ரத் துறை தெரி­வித்­துள்­ளது. கடந்த ஏப்­ரல் மாதம் குளி­ரூட்­டப்­பட்ட முழுக் கோழி­யின் சரா­சரி விலை கிலோ­வுக்கு $7.21. கடந்த மார்ச் மாதத்­தில் அதன் விலை $6.60ஆக இருந்­தது.

குளி­ரூட்­டப்­பட்ட கோழி இறக்­கை­க­ளின் விலை கடந்த மார்ச் மாதம் கிலோ­வுக்கு $8.75. இது கடந்த ஏப்­ரல் மாதம் $9.45ஆக அதி­க­ரித்­தது.

தடை குறித்து மலே­சியா அறி­வித்­த­தும் கோழி­க­ளின் விலை $0.50 அதி­க­ரித்­த­தா­க­வும் சில நாள்­க­ளுக்கு முன்பு அது மேலும் $0.30 ஏற்­றம் கண்­ட­தா­க­வும் உணவு, பானத் துறை நிறு­வ­னம் ஒன்­றின் இயக்­கு­நர் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!