லாரன்ஸ் வோங் துணைப் பிரதமர்

சிங்கப்பூர் அமைச்சரவையில் மாற்றம்

இவ்­வாண்டு பிப்­ர­வரி மாதம், நாடாளுமன்­றத்­தில் நிதி அமைச்­ச­ராக முதல் முறை­யாக வரவுசெல­வுத் திட்­டத்தை சீரா­கத் தாக்­கல் செய்து அனை­வ­ரது கவ­னத்­தை­யும் ஈர்த்த திரு லாரன்ஸ் வோங், துணைப் பிர­த­ம­ராக பதவி உயர்வு பெற்­றுள்­ளார். இம்­மா­தம் 13ஆம் தேதி­யி­லி­ருந்து அவ­ரது புதிய பொறுப்பு நடப்­புக்கு வரு­கிறது.

பிர­த­மர் லீ சியன் லூங்­குக்கு அடுத்­த­ப­டி­யாக திரு லாரன்ஸ் வோங் பிர­த­ம­ரா­வதை இந்த நியமனம் உறுதி செய்­கிறது.

மக்­கள் செயல் கட்­சி­யின் நான்­காம் தலை­மு­றைக் குழு­வுக்கு அவர் தலை­வ­ராக தேர்வு செய்­யப்­பட்டு இரண்டு மாதங்­களே ஆன நிலை­யில் அவ­ருக்கு அமைச்­ச­ர­வை­யில் உயர் பதவி வழங்­கப்­பட்­டுள்­ளது.

இதை­ய­டுத்து பிர­த­மர் லீ சியன் லூங் நாட்டில் இல்­லாத சம­யத்­தில் அவர் இடைக்­கா­லப் பிர­த­ம­ரா­கச் செயல்­ப­டு­வார்.

திரு லாரன்ஸ் வோங் தொடர்ந்து நிதி அமைச்­ச­ரா­க­வும் பொறுப்பு வகிப்­பார். அது மட்­டு­மல்­லா­மல் பிர­த­மர் அலு­வ­ல­கத்­தில் உத்­தி­பூர்வ குழு­வுக்­கும் அவர் பொறுப்­பாக இருப்­பார். இதற்கு முன் இதனை துணைப் பிர­த­ம­ரான ஹெங் சுவீ கியட் கவ­னித்து வந்­தார்.

திரு ஹெங் சுவீ கியட், 61, தொடர்ந்து துணைப் பிர­த­ம­ரா­க­வும் பொரு­ளி­யல் கொள்­கை­ களுக்­கான ஒருங்­கி­ணைப்பு அைமச்­ச­ரா­க­வும் இருப்­பார் என்று நேற்­றைய அறி­விப்­பில் தெரி­விக்­கப்­பட்­டது.

எதிர்­காலப் பொரு­ளி­யல் மன்றம், தேசிய ஆய்வு அற­நி­று­வ­னம், உற்­பத்­தித் திறன் நிதி நிர்­வா­கக் கழ­கம் ஆகி­ய­வற்றை அவர் தொடர்ந்து கவ­னித்து வரு­வார்.

அமைச்­ச­ரவை மாற்­றத்தை நேற்று அறி­வித்த பிர­த­மர் லீ சியன் லூங், கடந்த ஆண்டு ஏப்­ர­லில் நான்­காம் தலை­மு­றைக் குழு­வின் தலை­வர் பொறுப்­பி­லி­ருந்து திரு ஹெங் வில­கி­ய­தால் சிங்­கப்­பூர் தலை­மைத்­துவ மாற்­றத்­தின் தொடர்ச்­சி­யாக இந்த நட­வ­டிக்கை இடம்ெ­ப­று­வ­தா­கத் தெரி­வித்­தார்.

1980களி­லி­ருந்து சிங்­கப்­பூர் அமைச்­ச­ர­வை­யில் இரண்டு துணைப் பிர­த­மர்­கள் இருப்­பது வழக்­க­மாக இருந்து வரு­கிறது. ஆனால் 1990களில் விதி­வி­லக்­காக குறு­கிய காலத்­திற்கு பிர­த­மர் லீ சியன் லூங் மட்­டும் அப்­போது துணைப் பிர­த­ம­ராக இருந்­தார். அதன் பிறகு 2019ஆம் ஆண்­டி­லி­ருந்து துணைப் பிர­த­மர் ஹெங் மட்­டும் அப்­பொ­றுப்­பில் இருந்து வரு­கி­றார்.

கடந்த 2021 மே மாதத்­தில் செய்­யப்­பட்ட பெரிய அள­வி­லான அமைச்­ச­ரவை மாற்­றத்­தில் நான்­காம் தலை­மு­றை­யைச் சேர்ந்த அமைச்­சர்­க­ளுக்கு முக்­கிய பொறுப்­பு­கள் வழங்­கப்­பட்­டன.

அந்­தச் சம­யத்­தில் திரு வோங்­நிதி அமைச்­சராக நியமிக்கப் பட்டார்.

இந்த நிலை­யில் இவ்­வாண்டு ஏப்­ரல் மாதத்­தில் திரு வோங்கை நான்­காம் தலை­மு­றைத் தலை­வ­ராக அவ­ரது சகாக்­கள் தேர்ந்­தெ­டுத்­து உள்­ள­தா­க­வும் அதனை அமைச்­ச­ரவை ஏற்­றுக் கொண்­ட­தா­க­வும் பிர­த­மர் லீ சியன் லூங் அறி­வித்­தி­ருந்­தார்.

இம்­மு­டிவை, மக்­கள் செயல் கட்­சி­ கூட்­டத்­தில் கட்சியினரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் அங்­கீ­க­ரித்திருந்தனர்.

2011ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்­த­லில் போட்­டி­யி­டு­ வ­தற்கு முன்பு மூத்த அர­சாங்க ஊழி­ய­ரா­கப் பணி­யாற்­றிய திரு வோங், தற்­காப்பு மற்­றும் கல்­விக்­கான துணை அமைச்­ச­ரா­னார். 2012ல் கலா­சார, சமூக, இளை­யர் அமைச்­சுக்கு இடைக்­கால அமைச்­ச­ரா­க­வும் அவர் பொறுப்பு வகித்­தார். 2014ல் அவர் முழு அமைச்­ச­ராகப் பதவி உயர்வு பெற்­றார். 2015ல் தேசிய வளர்ச்சி அமைச்­ச­ரா­க­வும் ஆன அவர், 2016ல் துணை நிதி அமைச்­ச­ராக கூடு­தல் பொறுப்பை ஏற்­றார். 2020ஆம் ஆண்­டின் பொதுத் தேர்­த­லுக்­குப் பிறகு அவர் கல்வி அமைச்­ச­ரா­னார். பின்­னர் கடந்த ஆண்டு மே மாதத்­தில் அவ­ருக்கு அமைச்­ச­ர­வை­யில் நிதி அமைச்­சர் பொறுப்பு வழங்­கப்­பட்­டது.

பிரதமர் லீ சியன் லூங் நேற்று வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் அடுத்த தலைமுறைத் தலைமைத்து வம் வடிவம் பெற்று வருவதாகக் குறிப்பிட்டார்.

"நோய்த்தொற்றில் இருந்து சிங்கப்பூர் பாதுகாப்பாக விடுபட்டு பிரகாசமான எதிர்காலத்திற்குச் செல்ல இந்த மாற்றத்திற்கு அனை வரும் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்," என்று அவர் கேட்டுக் கொண்டார்.

துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தனது ஃபேஸ்புக் பதிவில் திரு வோங்குடன் இைணந்து பணியாற்ற உறுதி கூறியிருந்தார்.

"திரு லாரன்ஸ் வோங்குக்கு எங்களுடைய முழு ஆதரவு உண்டு. அவருடன் துணைப் பிரத மராகவும் பொருளியல் கொள்கை களுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராகவும் இணைந்து பணி யாற்றி அவர் வெற்றி பெற எல்லா வித உதவிகளையும் வழங்கு ேவன்," என்று திரு ஹெங் தெரி வித்திருந்தார்.

மக்கள் செயல் கட்சி நான்காம் தலைமுறையைச் சேர்ந்த இதர அமைச்சர்களும் திரு வோங்குக்கு தங்களுடைய ஆதரவை வெளிப் படுத்தியிருந்தனர்.

கல்வி அமைச்சரான சான் சுன் சிங், "பதவி உயர்வு அதிக பொறுப்புகளையும் கொண்டுள்ளது. ஒரே குழுவாக நாங்கள் ஒருவருக் கொருவர் ஆதரவாக இருப்போம்," என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந் தார்.

நாடாளுமன்ற நாயகர் டான் சுவான்-ஜின், மாற்றத்தை ஏற்படுத் தியதற்காக திரு வோங் உட்பட அனைவருக்கும் நன்றி தெரி வித்துக்கொண்டார்.

இதற்கிடையே அனைவரது ஆதரவையும் ஏற்றுக்கொள்ளும் வகையில் திரு லாரன்ஸ் வோங் தமது கருத்தை நேற்று ஃபேஸ் புக்கில் வெளியிட்டிருந்தார்.

அதில், "4ஆம் தலைமுறை அமைச்சர்கள் குழுவுக்குத் தலைமை ஏற்க வேண்டும் என்று சக அமைச்சர்கள் என்னைக் கேட்டபோது வாழ்க்கையில் மிகப் பெரிய பொறுப்பை சுமக்க வேண்டி யிருக்கும் என்பது எனக்குத் தெரியும். நான் ஏற்கெனவே கூறியதுபோல என்னுடைய பலத்தின் ஒவ்வொரு துளியையும் சிங்கப்பூருக்கும் சிங்கப்பூரருக்கும் அர்ப்பணித்து என்னால் இயன்ற தலைசிறந்த சேவையை ஆற்று வேன்," என்று அமைச்சர் வோங் மறுவுறுதிப்படுத்தினார்.

"துணைப் பிரதமராக புதிய பொறுப்புகளில் அடியெடுத்து வைக்கும் எனக்கு உங்களுடைய ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.

"இந்தப் பயணத்தில் அனை வருடனும் சேர்ந்து பணியாற்ற விரும்புகிறேன். நாம் இன்று எதிர்நோக்கும் பல்வேறு சவால் களை சிங்கப்பூர் கடந்து செல்லும் வகையில் முன்னேற்றப் பாதையை அமைப்பேன்," என்று துணைப் பிரதமராக பொறுப்பு ஏற்க விருக்கும் திரு வோங் தெரி வித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!