ஐரோப்பாவில் பயணக் குழப்பம்: 2,200 விமானச் சேவைகள் ரத்து

ஜெர்­மன் விமான நிறு­வ­ன­மான லுஃப்தான்சா, கொவிட்-19 தொற்­றால் உரு­வான ஆள் பற்­றாக்­கு­றை­யால் சிர­மப்­ப­டு­கிறது. அதன் கார­ண­மாக, இந்­நி­று­வ­னம் தனது 2,200 விமா­னச் சேவை­களை ரத்து செய்­து­விட்­டது.

கோடை விடு­முை­ற­யில் ஐரோப்­பி­யப் பய­ணங்­கள் ஏற்­கெ­னவே குழப்­பங்­க­ளைச் சந்­தித்து வரும் நிலை­யில் விமா­னச் சேவை­கள் ரத்து செய்­யப்­பட்­டி­ருப்­பது அந்­தக் குழப்­பங்­களை அதி­க­ரித்­துள்­ளது.

குறிப்­பாக, ஜூலை, ஆகஸ்ட் மாதங்­களில் ஐரோப்­பிய நக­ரங்­க­ளுக்­கான விமா­னங்­க­ளை­யும் ஜெர்­ம­னிக்­குள் சேவையாற்­றக்­கூ­டிய உள்­ளூர் விமா­னச் சேவை­க­ளை­யும் லுஃப்தான்சா ரத்து செய்­து­விட்­ட­தாக அதன் பேச்­சா­ளர் புளூம்­பெர்க் செய்தி நிறு­வ­னத்­தி­டம் கூறி­னார்.

ஜெர்­மனி உள்­ளிட்ட ஐரோப்­பிய நாடு­கள் கொவிட்-19 தொற்­றின் புதிய அலை­யு­டன் போராடி வரு­கின்­றன.

இதற்கு முந்­திய அலை­க­ளைக் காட்­டி­லும் ஆபத்து குறைந்­த­தாக புதிய தொற்­றலை இருந்­த­போ­தி­லும் வேலை­யி­டங்­க­ளுக்கு வரு­வோ­ரின் எண்ணிக்கை அடி­யோடு வீழ்ந்துவிட்­டது.

இத­னால், ஐரோப்­பிய நாடு­களில் காணப்­படும் கடு­மை­யான ஊழி­யர் பற்­றாக்­குறை விமா­னச் சேவை­க­ளி­லும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

பய­ணங்­கள் அதி­க­ரித்து பயண ஊழி­யர்­கள் குறைந்­த­தன் கார­ண­மாக ஐரோப்பா முழு­வ­தும் விமான நிலை­யங்­களில் பெருங்­கு­ழப்­பம் நில­வு­கிறது.

ஈராண்­டு­க­ளாக தொற்று மிகுந்­தி­ருந்த காலத்­தில் ஆட்­களை நீக்­கிய விமான நிறு­வ­னங்­கள் தற்­போது ஆள்­சேர்ப்­பில் தீவி­ர­மாக ஈடு­பட்டு வரு­கின்­றன.

அந்த நாடு­களில் அதி­க­ரித்து வரும் பண­வீக்­க­மும் விமா­னச் சேவை­யில் இன்­னொரு முட்­டுக்­கட்­டையை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

உயர்ந்­து­விட்ட வாழ்க்­கைச் செல­வி­னத்­தைச் சமா­ளிக்க சம்­பள உயர்வு வேண்­டும் என ஊழி­யர்­கள் கொடி பிடிக்­கத் தொடங்­கி­விட்­ட­னர்.

பிரிட்­டிஷ் ஏர்­வேஸ், ரயன்­ஏர் போன்ற விமான நிறு­வ­னங்­க­ளின் ஊழி­யர்­கள் வேலை­நி­றுத்­தம் செய்­யப்­போ­வ­தாக மிரட்டி வரு­கின்­ற­னர். அதன் ஒரு பகு­தி­யாக, லண்­டன் ஹீத்ரோ விமான நிலைய ஊழி­யர்­கள் வேலை நிறுத்­தத்­தைத் தொடங்க உள்­ள­னர்.

பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணச்சீட்டு முகப்புப் பணியாளர்கள் ஏற்கெனவே வெளிநடப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கொவிட்-19 தொற்று காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட 10 விழுக்காடு சம்பள வெட்டை நீக்கவேண்டும் என்பது அந்த ஊழியர்களின் கோரிக்கை.

இதனால் 30,000 ஊழியர்களைக் கொண்ட இந்த விமான நிறுவனம் தற்போது பெரும் பிரச்சிைனயில் சிக்கித் தவிக்கிறது. பயணிகளுக்கும் சிரமம் ஏற்பட்டு வருகிறது.

இதற்கிடையே, ஈஸிஜெட் விமான நிறுவனத்தின் ஸ்பெயின் விமானங்களின் ஊழியர்கள் ஜூலையில் ஒன்பது நாள் வேலைநிறுத்தம் செய்யத் திட்டமிட்டு உள்ளனர்.

ரயன்ஏர் நிறுவன ஊழியர்கள் ஆறுநாள் வேலை நிறுத்தம் அறிவித்ததைத் தொடர்ந்து இவர்களும் போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

தொடர்ந்து, மற்றோர் ஐரோப்பிய விமான நிறுவனமான 'கேஎல்எம்' டச்சு விமான நிறுவனத் தின் விமானிகள் இன்று சனிக்கிழமை ஒருநாள் வேலை நிறுத்தம் செய்கின்றனர்.

இதனால் தனக்கு சிறு பாதிப்பு மட்டுமே இருக்கும் என்று அந்த விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

சம்பள உயர்வு கேட்டு போராட பல்வேறு விமான நிறுவன ஊழியர்கள் திட்டம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!