மாணவர் முன்னேற்றத்திற்கான கல்விமுறை மாற்றத்திற்கு பெற்றோர் ஆதரவு அவசியம்: சான்

ஒவ்­வொரு மாண­வ­ரின் முன்­னேற்­றத்­தை­யும் கவ­னத்­தில் காண்டு சிங்­கப்­பூ­ரின் கல்விமுறை­யில் மாபெ­ரும் மாற்­றங்­கள் கொண்­டு­

வ­ரப்­பட்டு உள்­ள­தா­க­வும் சமூ­க­மும் குடும்­பங்­களும் அதற்கு பக்­க­ப­ல­மாக இருந்து வெற்­றி­காண வேண்­டும் என்­றும் கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் தெரி­வித்து உள்­ளார்.

தஞ்­சோங் பகார் சமூக மன்­றத்­தில் நடை­பெற்ற தேசிய தின விருந்து நிகழ்ச்­சி­யில் பங்­கேற்­றுப் பேசிய அவர் புதிய சமூக ஒற்­றுமை குறித்த தமது கருத்தை விவ­ரித்­தார்.

'முன்­னேறு சிங்­கப்­பூர்' நட­வ­டிக்­கை­யின்­கீழ் இட­ம­பெ­றும் முக்­கிய அம்­சங்­கள் குறித்து கல்வி அமைச்சு அடுத்து வரும் சில வாரங்­களில் வெளி­யி­டும் என்­றார் அவர்.

கொள்­ளை­நோய்க்­குப் பிந்­திய எதிர்­கா­லத்தை நோக்கி நாடு நடை­போ­டு­வ­தால் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு இடை­யி­லான புதிய சமூக ஒற்­றுமை அவ­சி­யம் என்­றார் அவர்.

மாண­வர்­கள் தங்­க­ளது விருப்­பத்­திற்­கும் திற­னுக்­கும் ஏற்ற கல்வி­ மு­றை­யைத் தேர்ந்து எடுக்­கும்­போது குடும்­பங்­கள் அவர்­க­ளின் விருப்­பத்­தோடு ஒத்­துப்­போ­வ­தோடு முன்­னேற்­றத்தை நோக்கி மாண­வர்­களை ஊக்­குவிக்க வேண்­டும் என்­றார் திரு சான்.

'முன்­னேறு சிங்­கப்­பூர்' நட­வ­டிக்கை சிங்­கப்­பூ­ரர்­கள் அனை­வ­ரும் எவ்­வாறு முன்­னேற்­றத்­தில் பங்­க­ளிக்­க­லாம் என்­பதை மீண்­டும் நினைத்­துப் பார்க்­கும் வாய்ப்பை வழங்­கு­வ­தாக அவர் குறிப்­பிட்­டார்.

"உதா­ர­ணத்­திற்கு, நம்­மில் பலர், எளி­தில் பாதிக்­கக்­கூ­டி­யோ­ருக்­கும் வச­தி­யற்­றோ­ருக்­கும் உத­வு­கி­றோம். இருப்­பி­னும் இந்த உத­விக்­குக் கிடைக்­கக்­கூ­டிய பலன் என்­பது சமூ­கத்­தின் எல்­லாப் பிரி­வி­ன­ரின் மனப்­போக்­கை­யும் செயல்­க­ளை­யும் பொறுத்­தது.

"அர­சாங்­கத்­தின் முயற்­சி­க­ளுக்கு பல்­வேறு சமூக அமைப்­பு­களும் ஆத­ரவு தந்து முக்­கிய பங்­காற்றி வரு­கின்­றன. சமூக முன்­னேற்­றக் கட்­ட­மைப்பு என்­னும் திட்­டம் நாட­ள­வில் நடப்­புக்கு வந்­துள்­ளது. பின்­தங்­கிய மாண­வர்­களை ஒருங்­கி­ணைத்து, முறை­யாக ஆத­ரிப்­ப­தற்­கான சமூக முயற்­சி­களை இத்­திட்­டம் மேம்­ப­டுத்­து­கிறது. ஒவ்­வொ­ரு­வ­ரும் எந்­தப் பின்­ன­ணி­யைச் சேர்ந்­த­வர் என்­ப­தற்­கும் அப்­பால் ஆற்­றல் பெறும் ஓர் இட­மாக சிங்­கப்­பூர் இருக்க வேண்­டும்," என்று திரு சான் தெரி­வித்­தார்.

'முன்­னேறு சிங்­கப்­பூர்' நட­வ­டிக் கையை துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங் கடந்த ஜூன் மாதம் தொடங்கி வைத்­தார்.

நேற்று மாலை நடைபெற்ற தேசிய தின விருந்து நிகழ்ச்­சி­யில் 650க்கும் மேற்­பட்ட குடி­யி­ருப்­பா­ளர்­கள் கலந்­து­கொண்­ட­னர்.

அடித்­தள அமைப்­பு­க­ளின் தலை­வர்­க­ளுடன் தஞ்­சோங் பகார் குழுத் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் இந்­தி­ராணி ராஜா, ஆல்­வின் டான், எரிக் சுவா, ஜோன் பெரேரா, ராடின் மாஸ் தனித்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மெல்­வின் யோங் ஆகி­யோ­ரும் பங்­கேற்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!