பிரதமர்: துவாஸ் துறைமுகம் பொருளியல் வளர்ச்சிக்கு உந்துசக்தி

துவாஸ் துறை­மு­கம் நேற்று முதல் கட்­ட­மாக மூன்று கப்­பல்­ நிறுத்துமிடங்களுடன் அதி­கா­ர­பூர்­வ­மா­கத் திறக்­கப்­பட்­டது.

திறப்பு விழா­வில் கலந்­து­கொண்டு பேசிய பிர­த­மர் லீ சியன் லூங், நாட்­டின் பொரு­ளி­யல் வளர்ச்­சிக்கு துவாஸ் துறை­மு­கம் உந்­து­சக்­தி­யாக இருக்­கும் என்று தெரி­வித்­தார்.

அனைத்­து­ல­கக் கடல்­துறை மைய­மாக சிங்­கப்­பூர் தொடர்ந்து திகழ துவாஸ் துறை­மு­கம் வகை செய்­யும் என்­றார் அவர்.

"சிங்­கப்­பூர் வழக்­கம்­போல் வர்த்­த­கங்­க­ளுக்­குத் தயா­ராக உள்­ளது என்­பதை துவாஸ் துறை­

மு­கத்­தைக் கட்ட எடுக்­கப்­பட்ட முடிவு உலக நாடுகளுக்கு உணர்த்துகிறது. நாம் முழு­வீச்­

சு­டன் முன்­னேற்­றப் பாதை­யில் சென்­று­கொண்­டி­ருக்­கி­றோம்," என்று

பிர­த­மர் லீ கூறி­னார்.

இதற்­கி­டையே, $20 பில்­லி­யன் செல­வில் கட்­டப்­பட்­டுள்ள துவாஸ் துறை­மு­கம் பல மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­தும் என்று சிங்­கப்­பூர் துறை­முக ஆணை­யம் தெரி­வித்­துள்­ளது.

"புதிய அத்­தி­யா­யம் தொடங்­கி­யுள்­ளது. உல­கின் வர்த்­தக மைய­மா­கத் திகழ

சிங்­கப்­பூ­ருக்­குப் பெரும் ஆற்­றல் இருக்­கிறது என்­பதை துவாஸ் துறை­மு­கத்­தால் காட்ட முடி­யும்," என்று ஆணை­யத்­தின் குழு­மத் தலை­வர் பீட்­டர் வோசர் தெரி­வித்­தார்.

துவாஸ் துறை­மு­கத்­தைப் பிர­த­மர் லீ நேற்று நேரில் சென்று பார்த்­தார்.

சிங்­கப்­பூ­ரின் மேற்­குப் பகு­தி­களில் உள்ள பல தொழிற்­பேட்­டை­க­ளுக்கு மிக அரு­கில் துவாஸ் துறை­மு­கம் இருப்­பது அதற்­குச் சாத­க­மா­ன­ ஒன்று எனத் திரு லீ கூறி­னார்.

ஜூரோங் தொழில்­துறை வட்­டா­ரம், ஜூரோங் ஏரி வட்­டா­ரம், துவாஸ் தொழில்­துறை வட்­டா­ரம் உள்­ளிட்ட பல தொழிற்­பேட்­டை­கள் துவாஸ் துறை­மு­கத்­துக்கு மிக அரு­கா­மை­யில் உள்­ளன.

"துறை­மு­கத்­துக்­குப் பக்­கத்­தில் இருப்­ப­தால் துறை­மு­கச் சேவை­களை விரை­வா­க­வும் குறைந்த விலை­யி­லும் பெற முடி­யும். இதன்­ வி­ளை­வாக உற்­பத்தி துரி­த­ம­டை­யும். உற்­பத்தி செய்­யப்­படும் பொருள்­களை அனைத்­து­ல­கச் சந்­தை­க­ளுக்கு விரை­வாக ஏற்­று­மதி செய்­ய­லாம்," என்­றார் பிர­த­மர் லீ.

எதிர்­கா­லத்­தில் சவால்­மிக்க செயல்­பாடு­ க­ளைச் செயற்கை நுண்­ண­றிவு கொண்டு தன்­னால் சமா­ளிக்க முடி­யும் என்­பதை அனைத்­து­ல­கப் பங்­கா­ளி­க­ளுக்­கும் கப்­பல்­துறை நிறு­வ­னங்­களுக்கும் துவாஸ் துறை­மு­கம் உறுதி அளிக்­கும் என்­றார் அவர்.

அது­மட்­டு­மல்­லாது, ஊழி­யர்களுக்கு அது கூடு­தல் வேலை வாய்ப்­பு­களை உரு­வாக்­கி­உள்ளதையும் திரு லீ சுட்­டி­னார்.

கொள்­க­லன்­களை பாரந்­தூக்­கி­கள் இறக்கி­வைத்­த­தும் அவற்றைத் தானி­யங்க வாக­னங்­கள் ஏற்­றிச் செல்­கின்­றன.

துவாஸ் துறை­மு­கம் நான்கு கட்­டங்­

க­ளா­கத் திறக்­கப்­படும்.

கெப்­பல், பிரானி, பாசிர் பாஞ்­சாங், தஞ்­சோங் பகார் ஆகிய துறை­மு­கங்­களில் ஆற்­றப்­படும் பணி­கள் 2040ஆம் ஆண்டு அள­வில் துவாஸ் துறை­மு­கத்­தில் ஒருங்­கி­ணைக்­கப்­படும்.

கையா­ளும் கொள்­ள­ளவு அடிப்­ப­டை­யில் சிங்­கப்­பூர் துறை­மு­கங்­கள் தற்­போது கொண்­டுள்ள ஆற்­ற­லை­விட துவாஸ் துறை­மு­கம் மூன்­றில் ஒரு பகுதி அதி­கம் கொண்­டி­ருக்­கும்.

துவாஸ் துறை­மு­கம் நேற்று அதி­கா­ர­பூர்­வ­மா­கத் திறக்­கப்­பட்­டா­லும் அதில் உள்ள இரண்டு கப்­பல் நிறுத்­து­மி­டங்­கள் கடந்த ஆண்டு செப்­டம்­பர் மாதம் திறக்­கப்­பட்­டன.

விநி­யோ­கச் சங்­கிலி நெருக்­கடி ஏற்­பட்­ட­போது அதைச் சமா­ளிக்க அவை திறக்­கப்­பட்­டன. இந்த ஆண்டு இறு­திக்­குள் துவாஸ் துறை­மு­கத்­தில் ஐந்து கப்­பல் நிறுத்­து­

மி­டங்­கள் செயல்­படும்.

அடுத்த இரு­பது ஆண்­டு­களில் கடல்­து­றை­யில் ஆயி­ரக்­க­ண­க்கான வேலை­களை துவாஸ் துறை­மு­கம் உரு­வாக்­கும் என்று எதிர்­பார்­க்கப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!