வசதிகுறைந்த முதியோரை மகிழ்விக்கும் தீபாவளிக் கொண்டாட்டங்கள்

சிங்கப்பூரில் ஈராண்டு காலத்திற்குப் பிறகு தீபாவளித் திருநாள் மீண்டும் கோலா கலமாகக் கொண்டாடப்படும்போது வசதி குறைந்த முதியோரை மகிழ்விக்கும் நிகழ்ச் சிகளும் இடம்பெறும். இதற்கு லிஷா எனப்­படும் லிட்­டில் இந்­தியா வர்த்­த­கர்­கள், மர­பு­டைமைச் சங்­கம், சிங்­கப்­பூர் இந்­தி­யர் மேம்­பாட்­டுச் சங்­கம் (சிண்டா) மற்­றும் இந்­திய மர­பு­டைமை நிலை­யம் ஏற்பாடு செய்துவருகின்றன.

“நர­கா­சு­ர­னுக்­கும் கிருஷ்­ண­னுக்­கு மிடையே இருந்த போராட்டகாலத்­தின் நிறை­வா­க­வும் இரு­ளில் பிறந்த வெளிச்­ச­மா­க­வும் தீபாவளிப் பண்டிகை கொண்­டா­டப்­பட்டுவருகிறது. அவ்­வ­கை­யில் கொவிட் -19 கிரு­மித்­தொற்று மக்­க­ளின் மீள்­தி­றனை சோதித்த போராட்­ட­மாக அமைந்­தது. இக்­கி­ரு­மித்­தொற்று உல­க­மெங்­கும் பலரை பாதித்து வரும் விகி­தம் குறை­ய­வும், அதற்­கான பாது­காப்பு நடை­மு­றை­கள் தளர்த்­தப்­ப­டு­வ­தை­யும் முன்­னிட்டு இவ்­வாண்­டின் தீபா­வளி கொண்­டாட்­டங்­கள் பெரு­ம­ள­வில் நடக்­க­வுள்­ளன,” என்­றார் சிண்­டா­வின் தலைமை நிர்­வாக அதி­கா­ரி­யான அன்ப­ரசு ராஜேந்­தி­ரன்.

இம்­மா­தம் 16ஆம் தேதி­யன்று லிஷா­வும் வசந்­தம் ஒளி­வ­ழி­யும் இணைந்து ஏற்­பாடு செய்­துள்ள ஒளி­யூட்டு நிகழ்ச்சியோடு தீபாவளிக் கொண்­டாட்­டங்­கள் தொடங்கும். அன்று மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடக்­க­வுள்ள வி­ழா­வில் துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொள்ள இருக்­கி­றார். புராண கதா­பாத்­தி­ரங்­க­ளான நர­கா­சு­ரன், கிருஷ்ணா, ராதா ஆகி­யோரைப் பிரதி­நி­திக்­கும் உருவபொம்மைகளை லிட்டில் இந்­தி­யாவில் அக்­டோ­பர் 1 அன்று பொது­மக்­கள் காண­லாம். லிஷா­வின் நேற்­றைய தீபா­வளி செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் இத்தகவல்கள் தெரி­விக்­கப்­பட்­டன.

அதே நாளன்று கிளைவ் ஸ்தி­ரீட்­டில் குடும்­பங்­க­ளுக்­கான விளை­யாட்டுப் போட்டி ‘தீபா­வளி கேம் சேலஞ்ச்’ என்­னும் பெய­ரில் நடை­பெ­ற­வுள்­ளது. மேலும், தீபா­வளி நேரடி சமை­யல் நிகழ்ச்­சி­யும் மெய்­நி­கர் பாணி­யில் பிர­பல இந்­திய உண­வ­கங்­க­ளின் நட்­சத்­திர சமை­யல்­கா­ரர்­களைக் கொண்டு நடத்­தப்­படும்.

பேருந்­து­க­ளி­லும் ரயில்­க­ளி­லும் தீபா­வளிக் கொண்­டாட்ட உணர்வை பிர­தி

­ப­லிக்­கும் அலங்­கா­ரங்­களை எஸ்­எம்­ஆர்டி நிறு­வ­னத்­து­டன் சேர்ந்து லிஷா பொருத்த உள்­ளது. இந்த அலங்­கா­ரங்­கள், அக்­டோ­பர் 3 முதல் ஆறு வாரங்­க­ளுக்கு பொதுப் போக்­கு­வ­ரத்­துச் சேவை­களில் காணப்­படும். போக்­கு­வ­ரத்து அமைச்­சர் எஸ்.ஈஸ்­வ­ரன் ஹார்­பர்­ஃபி­ரண்ட் எம்ஆர்டி நிலையத்தில் இந்த அலங்­கா­ரங்­களை அதி­கா­ரபூர்­வ­மாகத் தொடங்கிவைப்பார்.

‘மிஸ் அண்ட் மிஸஸ் லிஷா சாரி குவீன்’ என்னும் சேலை அழகு ராணிப் போட்டி, தமிழ் ‘ராப்’ இசைப் போட்டி, கலா சார நிகழ்ச்சி லிட்­டில் இந்­தி­யா­வில் ‘புதை­யல் வேட்டை’ பாணி­யில் போட்டி, தீபா­வளி பல­கா­ரங்­கள் தயா­ரிக்க கற்­றுத்­த­ரும் நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிகளை லிஷா­ ஏற்று நடத்த உள்ளது.

சிண்டா அதன் ‘புரா­ஜெக்ட் கிவ்’ எனும் நிதித் திரட்டில் மீண்­டும் ஈடு­ப­ட­வுள்­ளது. பல­கா­ரங்­கள், தீபா­வ­ளிக்குத் தேவை­யான பொருள்­கள் போன்­ற­வற்றைத் தந்து, வசதி குறைந்த ­கு­டும்­பங்­களும் குதூ­கல உணர்­வில் திளைக்க வாய்ப்­ப­ளிக்க விரும்­பு­கின்­றது சிண்டா.

“ஒவ்­வோர் ஆண்­டும் முதி­யோர்­ தங்க ளது பேரப்­பிள்­ளை­க­ளு­டன் தீபா­வளிச் சந்­தை­யில் உள்ள ‘புரா­ஜெக்ட் கிவ்’ பெட்­டி­யில் நன்­கொ­டை­ய­ளிப்­பதை பார்ப்­பது மனதை நெகிழ வைக்­கும்,” என்­றார் ஜோதி ஸ்டோர் புஷ்­பக் கடை உரி­மை­யா­ள­ரான திரு ராஜ்­கு­மார் சந்­திரா.

இவ்­வாண்டு ஒரு புது முயற்­சி­யாக வாடகை வீடு­களில் வசிக்கும் முதி­யோர்­அல்­லது குறைந்த வரு­மா­ன முதி­யோரை லிட்­டில் இந்­தி­யா­விற்கு ஓர் உல்­லாசப் பய­ணமாக அழைத்­துச் செல்ல சிண்­டா­ குழு­வி­னர் திட்­ட­மிட்­டுள்­ள­னர். ஒவ்­வொரு முதி­யோ­ரும் ஓர் இளை­ய­ரோடு சேர்ந்து இப்­ப­ய­ணத்­தில் செல்­வார்­.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!