புத்தாக்கத்தில் சிங்கப்பூருக்கு ஏழாவது இடம்

புத்தாக்கத்தில் சிங்கப்பூருக்கு ஏழாவது இடம்

1 mins read
a2ad7410-1a2f-42a2-ac30-4c3307ec5f14
கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

உலகில் புத்தாக்கத்தைப் பொறுத்தவரை சிங்கப்பூர் இப்போது ஏழாவது ஆகப்பெரிய பொருளியலாக இருக்கிறது. சென்ற ஆண்டில் சிங்கப்பூர் எட்டாவது இடத்தில் இருந்தது.

உலக அறிவுசார் சொத்து நிறுவனம் என்ற அமைப்பும் 'பார்சுலாண்ஸ் இன்ஸ்ட்டியுட்' என்ற லாபநோக்கற்ற ஆய்வு அமைப்பும் உலக புத்தாக்க அட்டவணை 2022 என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டன.

அந்த அறிக்கை, சிங்கப்பூரை ஏழாவது ஆக அதிக புத்தாக்கப் பொருளியல் என்று வரிசைப்படுத்தி இருக்கிறது.

புத்தாக்கத்தில் வெற்றி பெறக்கூடிய ஆற்றல் ஒரு நாட்டிடம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதற்கு ஏற்ப, 132 நாடுகளை அந்த அறிக்கை ஆராய்ந்து வரிசைப்படுத்தியது.

சுவிட்சர்லாந்துதான் உலகிலேயே புத்தாக்கத்தில் முதலிடத்தில் இருக்கிறது. அமெரிக்கா, சுவீடன், பிரிட்டன், நெதர்லாந்து ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

அரசியல், செயல்முறை நிலைப்பாடு, வலுவான விதிமுறைகளை உருவாக்கி அமல்படுத்தும் ஆற்றல் ஆகியவை உள்ளிட்ட பெரும்பாலானவற்றில் சிங்கப்பூர் முதல்இடத்தில் உள்ளது.

அதிக தொழில்நுட்ப இறக்குமதிகள், அறிவியல், பொறியியல் துறைகளில் பட்டதாரிகளின் விகிதாச்சாரம் போன்றவற்றிலும் உயரிய இடத்தில் சிங்கப்பூர் உள்ளது.

இருந்தாலும் புத்தாக்க நடவடிக்கைகளால் உருவாகும் பலாபலன்களைப் பார்க்கையில் சிங்கப்பூர் ஓரிடம் இறங்கி 14வது இடத்தில் உள்ளது.