இந்திய விமான நிலையங்களில் பரிசோதனை, தாஜ்மகாலுக்குள் நுழைய கட்டுப்பாடு

நாட்­டுக்­குள் நுழை­யும் அனைத்­து­ல­கப் பய­ணி­களில் 2 விழுக்­காட்­டி­ன­ரி­டம் விமான நிலை­யங்­களில் குத்­து­ம­திப்­பாக கொவிட்-19 பரி­சோ­தனை மேற்­கொள்­ளும் நட­வ­டிக்கை தொடங்­கப்­படும் என்று இந்­தி­யா­வின் சுகாதார அமைச்­சர் டாக்­டர் மன்­சுக் மாண்­ட­வியா நேற்று இந்­திய நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

சீனா உள்­ளிட்ட நாடு­களில் உரு­வெ­டுத்­துள்ள பிஎஃப்.7 என்­னும் புதிய வகைக் கிருமி இந்­தி­யா­வில் நால்­வ­ரி­டம் கண்­ட­றியப்­பட்டுள்­ளது. இந்த எண்­ணிக்கை படிப்­ப­டி­யாக உய­ரு­வ­தற்­குள் புதிய கட்­டுப்­பா­டு­களை விதிக்க பல மாநி­லங்­கள் தயா­ராகி வரு­கின்­றன.

நில­வ­ரம் குறித்து நாடா­ளு­மன்­றத்­தில் விளக்­கிய டாக்­டர் மாண்ட­வியா, “உல­க­ள­வி­லான கொள்ளை­ நோய் அபா­யம் இன்­னும் முற்றுப்­ பெ­ற­வில்லை. கொள்­ளை­நோய்க் கிருமி அவ்­வப்­போது தனது வடி­வத்தை மாற்றி வரு­கிறது.

“புத்­தாண்டு உள்­ளிட்ட விழாக்­கா­லம் நெருங்­கு­வ­தால் விழிப்­பு­டன் கண்­கா­ணிப்­பில் ஈடு­ப­டு­மாறு எல்லா மாநி­லங்­களும் கேட்­டுக்­கொள்­ளப்­பட்டுள்­ளன.

“முகக்­க­வ­சம் அணி­வது, கை

க­ளைச் சுத்­த­மாக வைத்­துக்­கொள்­வது ஆகி­ய­வற்றின் முக்­கி­ய­த்­து­வத்தை பொது­மக்­க­ளி­டம் தொடர்ந்து எடுத்­து­ரைக்­கு­மாறு மாநில அர­சாங்­கங்­கள் வலி­யு­றுத்­தப்­பட்டுள்­ளன,” என்­றார் அவர்.

இந்­தி­யா­வில் தற்­போது சரா­

ச­ரி­யாக நாள் ஒன்­றுக்கு 153 பேரி­டம் கொவிட்-19 தொற்று கண்­ட­றி­யப்­பட்டு வரு­வ­தா­க­வும் சுகா­தார அமைச்­சர் கூறி­னார்.

இந்­தி­யா­வில் முகக்­க­வ­சம் அணி­வது கட்­டா­ய­மில்லை. இருப்­பி­னும் நாடா­ளு­மன்­றக் கூட்­டத்­தில் பங்­கேற்ற பல உறுப்­பி­னர்­கள் முகக்­க­வ­சம் அணிந்து காணப்­பட்­ட­னர்.

இந்­நி­லை­யில் புகழ்­பெற்ற சுற்­று­லாத்­த­ல­மான தாஜ்­ம­கா­லுக்­குள் நுழைய கொவிட்-19 பரி­சோ­தனை கட்­டா­யம் என்று அறி­விக்­கப்­பட்டு உள்­ள­தாக ஏஎன்ஐ செய்தி நிறு­

வ­னம் தெரி­வித்­துள்­ளது.

பிரதமர், முதல்வர்கள்

தனித் தனி ஆலோசனை

கிருமிப் பரவல் நிலைமை பற்றி ஆராய உயர்மட்­டக் கூட்­டம் ஒன்றை பிர­த­மர் மோடி நேற்று மாலை கூட்டி இருந்தார்.

அதேபோல தமி­ழக முதல்­வர் மு.க. ஸ்டா­லின், புது­டெல்லி முதல்­வர் அர­விந்த் கெஜ்­ரி­வால், இதர சில மாநிலங்களின் முதல்வர்களும் தங்­க­ளது மாநில கொவிட்-19 நில வரம் குறித்து நேற்று ஆலோ­சனை நடத்­தி­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!