சிங்கப்பூர்-இந்தியா உடனடிப் பணப் பரிவர்த்தனை முறை அறிமுகம்

சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து இந்­தி­யா­விற்கு இனி உட­ன­டி­யாகப் பணம் அனுப்­பும் பரி­வர்த்­தனை முறை நேற்று அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. சிங்­கப்­பூ­ரின் ‘பேநவ்’, இந்­தி­யா­வின் யுபிஐ எனப்­படும் ‘யுனி­பை­ஃட் பேமென்ட்ஸ் இன்­டர்­ஃபேஸ்’ இணை­ய­வ­ழித் தொடர்­பு­கள் இணைந்து இம்­மு­றையை செயல்­படுத்­தி­யுள்­ளன.

சிங்­கப்­பூர் நாணய ஆணை­ய­மும் இந்­திய மத்­திய வங்­கி­யும் இணைந்து இவ்­வ­ச­தியை அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளன. இரு நாடுகளுக்கும் இடை­யி­லான எல்லை தாண்­டிய உறவை மேம்­படுத்­தும் நோக்­கில் இந்த அம்­சம் கடந்த 2021ஆம் ஆண்டு செப்­டம்­பர் மாதம் அறி­விக்­கப்­பட்­டது.

இம்­மு­றை­யின் கீழ் டிபி­எஸ் வங்­கி­யும் லிக்குவிட் குழு­மம் எனும் நிதித் தொழில்­நுட்ப நிறு­வ­ன­மும் இணைக்­கப்­பட்­டுள்­ளன. முதற்கட்டமாக, தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட டிபி­எஸ், பிஓ­எஸ்பி வாடிக்­கை­யா­ளர்­கள் ஒரு பரி­வர்த்­த­னைக்கு $200 வரை­யி­லும் நாளொன்­றுக்கு $500 வரை­யி­லும் இந்­தி­யா­விற்கு பணம் அனுப்­ப­லாம். இத்­தொகை அடுத்த மாதம் 31ஆம் தேதிக்கு பிறகு $1,000 ஆக உயர்த்­தப்­படும்.

வாடிக்­கை­யா­ளர்­கள் பணம் பெறு­வோ­ரின் கைப்­பேசி எண், யுபிஐ அடை­யாள எண் அல்­லது மெய்­நி­கர் கட்­டண முக­வ­ரியைப் பயன்­ப­டுத்தி எளி­தாகப் பணம் அனுப்­ப­லாம்.

அதே­போல் இந்­தி­யா­வின் ஆக்­சிஸ் வங்கி, டிபி­எஸ் இந்­தியா, ஐசி­ஐ­சிஐ வங்கி, இந்­தி­யன் வங்கி, இந்­தி­யன் ஓவர்­சீஸ் வங்கி, ஸ்டேட் பாங் ஆஃப் இந்­தியா ஆகிய ஆறு வங்­கி­க­ளின் கணக்­கு­கள் மூலம் இவ்­வ­ச­தி­யைப் பயன்­ப­டுத்­த­லாம். நாள­டை­வில் சிங்­கப்­பூ­ரில் தகு­தி­பெற்ற பல்­வேறு வங்­கி­களும் நிதி நிறு­வனங்­களும் இதில் இணைக்­கப்­படும்.

நேற்று நடை­பெற்ற இதன் அறி­முக விழா­வில் சிங்­கப்­பூர் பிர­த­மர் லீ சியன் லூங்­கும் இந்­தி­யப் பிர­த­மர் நரேந்­திர மோடி­யும் இணை­யம்வழி கலந்து கொண்­ட­னர். இந்­நி­கழ்­வில் சிங்­கப்­பூர் நாணய ஆணை­யத்­தின் நிர்­வாக இயக்­கு­நர் ரவி மேனன், இந்­திய மத்­திய வங்­கி­யின் ஆளு­நர் ஷக்தி­கந்தா தாஸ் ஆகி­யோர் இரு நாடு­க­ளுக்­கும் இடை­யில் வெற்­றி­க­ர­மாக முதல் பணப்­ப­ரி­வர்த்­த­னையை மேற்­கொண்­ட­னர்.

சரா­ரி­யாக ஆண்டு ஒன்­றுக்கு ஒரு பில்­லி­யன் அமெ­ரிக்க டாலர் வரை இரு நாடு­க­ளுக்­கும் இடை­யே­ பணப்­ப­ரி­வர்த்­த­னை­கள் செய்யப்படும் நிலை­யில் இவ்­வ­சதி அனை­வ­ருக்­கும் பய­னுள்ள வகை­யில் அமை­யும் என்­றும் விரல்­நு­னி­யில் இனி பணத்தை அனுப்­ப­வும் பெற­வும் முடி­யும் என்­றும் சிங்­கப்­பூர்ப் பிர­த­மர் லீ சியன் லூங் தெரி­வித்­தார்.

“இது­நாள் வரை­யில் தங்­க­ளு­டைய சொந்த நாடு­களில் உட­னுக்­கு­டன் பணப்­ப­ரி­வர்த்­தனை செய்­த­தைப் போலவே இனி சிங்­கப்­பூ­ருக்­கும் இந்­தி­யா­வுக்­கும் இடை­யில் செய்­ய­லாம்,” என்று இந்­தி­யப் பிர­த­மர் நரேந்­திர மோடி கூறி­னார்.

இது­கு­றித்து இந்­தி­யன் ஓவர்­சீஸ் வங்­கி­யின் சிங்­கப்­பூர் கிளை­யின் தலைமை நிர்­வாக அதி­காரி பிரேம்­கு­மார் சிவ­ராஜ், “மருத்­து­வம், கல்வி உள்­ளிட்ட பல்­வேறு உட­ன­டித் தேவை­க­ளுக்­குப் பணம் அனுப்­ப­வும் பெற­வும் இனி தடை­யி­ருக்­காது,” என்­றார்.

வெளி­நாட்டு ஊழி­ய­ரான செல்­வ­கு­மார் ராஜேந்­தி­ரன், “இனி குடும்­பத் தேவை­களுக்கு உட­ன­டி­யா­கப் பணம் அனுப்­ப­லாம் என்­பது மிகுந்த மகிழ்ச்­சி­ய­ளிக்­கிறது,” என்­றார். இந்­தி­யா­வில் வசிக்­கும் பெற்­றோ­ருக்கு மாதா­மா­தம் பணம் அனுப்­பும் தனி­யார் நிறு­வன மேலா­ளர் ஷோபா கும­ரே­சன், “இத்­த­கைய வசதி இருந்­தால் நன்­றாக இருக்­கும் என அடிக்­கடி நினைப்­ப­துண்டு. இனி உட­னுக்­கு­டன் பணம் அனுப்­ப­லாம்,” என்று மகிழ்ச்சி தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூர் இந்­திய வர்த்­தக, தொழிற்­ச­பைத் தலை­வர் நீல் பரேக், “இந்­தப் புதிய வச­தியை வர­வேற்­கி­றோம், சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்கு இது பேரு­த­வி­யாக இருக்­கும்,” என்று கூறி­னார்.

சிங்­கப்­பூ­ருக்­கும் இந்­தி­யா­விற்­கும் இடை­யி­லான வலு­வான பங்­கா­ளித்­து­வம், தொடர்ந்து புத்­தாக்­கத் தீர்­வு­களை முன்­னெ­டுக்­கும் என்றும் இரு­நாட்டு மின்­னி­லக்­கப் பொரு­ளி­யல்­க­ளுக்­கும் கூடு­த­லான வாய்ப்­பு­கள் உரு­வாக்­கப்­படும் என்றும் பிர­த­மர் லீ ஃபேஸ்புக்கில் நம்­பிக்கை தெரி­வித்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!