பிலிப்பீன்ஸில் தேர்தல் நாளன்று வன்முறை: 10 பேர் மரணம்

மணிலா: பிலிப்பீன்ஸில் புதிய அதிபர் மற்றும் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக வாக்குப் பதிவு நேற்று தொடங்கிய வேளையில் அங்கு பல இடங்களில் நடந்த வன்முறைச் சம்பவங்களில் குறைந்தது 10 பேர் உயிரிழந்ததாக போலிசார் கூறினர். இருப்பினும் ஒரு சில இடங்களில் நடந்த வன்முறைச் சம்பவங்களைத் தவிர மற்றபடி பல இடங்களில் எவ்வித இடையூறும் இல்லாமல் மக்கள் வாக்களித்ததாக அதிகாரி கள் கூறியுள்ளனர்.

மணிலாவுக்கு அருகே உள்ள ரோசாரி நகரில் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அரசியல் வன்முறைச் சம்பவங்கள் அதிக மாக நடக்கக்கூடிய இடம் அது என்றும் போலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். தென் பிலிப்பீன்சில் உள்ள ஒரு சிறிய நகரில் வாக்களிப்பு நிலையத்திற்குள்ளேயே ஒரு பெண் சுட்டுக் கொல்லப்பட்ட தாகவும் போலிசார் கூறினர்.

வாக்காளர்களுக்காக மணிலா வாக்களிப்பு நிலையத்தின் கதவை பாதுகாப்பு காவலர் ஒருவர் திறந்து விடுகிறார். படம்: ஏஎஃப்பி

Loading...
Load next