ஆஸி. மலையிலிருந்து விழுந்த சிங்கப்பூர் பெண் மரணம்

ஆஸ்திரேலியாவின் 'புளுமவுண் டன்' மலை உச்சியிலிருந்து தவறி விழுந்த சிங்கப்பூர் பெண் ஒருவர் மரணமடைந்தார். பயிற்சி ஆசிரியரான 21 வயது செல்வி செங் ‌ஷி மின்னுக்கு முப்பது மீட்டர் உயரத்திலிருந்து தவறி விழுந்ததில் படுகாயங்கள் ஏற்பட்டன. மலை உச்சியிலிருந்து நீர் வீழ்ச்சியை எட்டிப்பார்க்க முயற்சி செய்தபோது கால் இடறி தவறி விழுந்தார் என்று அவருடன் சென்ற காதலன் திரு ஹென்றி யெண்டல் ஆஸ்திரேலிய ஊடகங் களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். செவ்வாய்க் கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் விபத்து நிகழ்ந்தது. அப்போது செல்வி செங்கின் தந்தையும் அவர்களுடன் இருந்தார். "முதலில் அலறல் சத்தம் கேட்டது, பின்னர் 'பேங்' என மோதல் சத்தம் கேட்டது," என்று திரு யெண்டல் தெரிவித்தார்.

உடனே இருவரும் நீர் வீழ்ச்சியின் அடிப்பகுதிக்கு ஓடிச் சென்று பார்த்தனர். புகழ்பெற்ற நீச்சல் பகுதியான எம்ப்ரஸ் நீர் வீழ்ச்சி நீர்ப்பகுதியில் செல்வி செங் தலைகுப்புறக் கிடந்தார். அந்த சமயத்தில் உறைய வைக்கும் நீரில் பாய்ந்த திரு யெண்டல் இருபது நிமிடங்களாகப் போராடி செல்வி செங்கை வெளியே கொண்டு வந்தார். "அதிர்ஷ்டவசமாக சிலர் உதவிக்கு வந்தனர். நான் ஆம் புலன்சுக்கு கூக்குரலிட்டேன்," என்றார் அவர். அங்கு வந்த மீட்புக் குழுவினர் செல்வி செங்கின் உடல்நிலையை நிலைப்படுத்தி கோமா நிலையில் வைத்தனர். இதற்கிடையே அவரை ஏற்றிச் செல்வதற்காக அங்கு வந்த ஹெலிகாப்டர் பலத்த காற்று வீசிய தால் தரை இறங்க முடியவில்லை.

மலை உச்சியிலிருந்து விழுந்த செல்வி செங் ‌ஷி மின்னுக்கு எம்ப்ரஸ் நீர்வீழ்ச்சியின் அடிப்பகுதியில் அவசர முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டது. படம்: டெய்லி டெலிகிராஃப்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!