வியட்னாம் மீதான ஆயுதத் தடைகள் அகற்றப்பட்டன

ஹனோய்: வியட்னாமுக்கு ராணுவ ஆயுதங்களை விற்பதற்கு விதிக் கப்பட்டிருந்த தடை முழுமையாக அகற்றப்படுகிறது என்று நேற்று அதிபர் பாரக் ஒபாமா அறிவித்தார். பல ஆண்டுகளாக வியட்னா முக்கு ஆயுதங்களை விற்க அமெரிக்கா தடை விதித்திருந் தது. இந்தத் தடை அகற்றப்படுவதாக அமெரிக்க அதிபர் சொன்னார். வியட்னாமிய அதிபர் டிரான் டான் குவாங்குடன் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய திரு ஒபாமா, “வியட்னாமுடன் தற்காப்பு உறவை வலுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக ஆயுத விற்பனைத் தடை அகற்றப்படுகிறது,” என்றார்.

அதே சமயத்தில் இது, இந்த வட்டாரத்தில் அதிகரித்து வரும் சீனாவின் பலத்துக்கு எதிரான நடவடிக்கை என்று கூறப்படுவதை அவர் மறுத்தார். அமெரிக்காவுக்கும் வியட்னா முக்கும் இடையிலான உறவை வழக்க நிலைக்கு கொண்டு வரும் முயற்சியாக இது இடம்பெறுகிறது என்றும் திரு ஒபாமா கூறினார். தற்போது ஹோ சி மின் நகரம் என்று அழைக்கப்படும் சைகோன் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து 1975 ஏப்ரலில் வியட்னாமிய போர் முடிவுக்கு வந்தது.

வியட்னாமுக்கு வந்த அதிபர் ஒபாமாவுக்கு ஹனோய் நகர அதிபர் மாளிகைக்கு முன் அந்நாட்டின் அதிபர் டிரான் டாய் குவாங் சிறப்பான வரவேற்பு அளித்தார். படம்: ராய்ட்டர்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

புத்ராஜெயாவில் உல்லாசமாக சைக்கிளோட்டிச் செல்லும் மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது (முன் வரிசையில்). படம்: Chedet Official/யூடியூப்

20 Aug 2019

மலேசியப் பிரதமர் மகாதீரின் 11 கி.மீ. உல்லாச சைக்கிளோட்டம்