சீனப் படகைத் தடுத்து வைத்த இந்தோனீசியா

ஜகார்த்தா: தென் சீனக்­க­ட­லில் நட்டுனா தீவு­களுக்கு அப்பால் இந்­தோ­னீ­சிய தண்­ணீ­ரில் சீன மீன்­பி­டிப் படகை­யும் அதன் பணிக்­கு­ழுவை­யும் இந்­தோ­னீ­சி­யா­வின் கடற்­படை தடுத்து வைத்­தி­ருக்­கிறது. மார்ச் மாதம் முதல் நடை­பெறும் இத்தகைய மூன்றா­வது சம்ப­வம் இது. சென்ற வெள்­ளிக்­கிழமை கடற்­ப­யிற்­சி­யின்­போது இந்­தோ­னீ­சியா பகு­தி­யில் இந்த மீன்பிடி படகு தென்­பட்­ட­தாக துணை தளபதி ஆரிஃப் பத்­ருத்­தீன் கூறினார். எச்­ச­ரிக்கை துப்­பாக்கி சூடு­களுக்­குப் பிறகும் மீன்பிடி படகு விலகிச் செல்­லா­த­தால் படகைத் தடுத்து நிறுத்­துவதற்காக படகின் மீது துப்­பாக்கிச் சூடு நடத்­தப்­பட்­ட­தாக அவர் விளக்­கினார். தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்­கும் படகின் பணிக்­கு­ழு­வில் ஒரு பெண் இருப்­ப­தா­க­வும் விசாரணை தொடர்­வ­தா­க­வும் அவர் கூறியுள்ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பேங்காக்கில் உள்ள உள்ளூர் வாக்குச்சாவடிகளுக்கு விநியோகிப் பதற்காக வாக்களிப்பு விவரங்கள் அடங்கிய தாளுடன் தயாராக வைக்கப்பட்டிருந்த வாக்குப்பெட்டிகள் படம்: ஏஎஃப்பி

24 Mar 2019

ஐந்து ஆண்டு ராணுவ ஆட்சிக்குப் பிறகு தேர்தல்

பிரம்புக் கூடையில் வைத்து  மனிதக் குரங்கை கடத்த ரஷ்யர் முயற்சி செய்தார் என்று அதிகாரி ஒருவர் விளக்குகிறார். நடுவில் கைது செய்யப்பட்ட ரஷ்யரான ஆன்ட் ரெய் ஷெஸ்ட்கோவ். படம்: ஏஎஃப்பி

24 Mar 2019

பெட்டியில் மனிதக்குரங்கை கடத்திய ரஷ்யர் கைது