கடல் பகுதி: தீர்வு காண்பதில் இந்தோனீசியா ஈடுபாடு

ஜகார்த்தா: தென்சீனக் கடல் பகுதி தொடர்பான பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வு காண்பதில் இந்தோனீசியா தீவிரமாக ஈடு பட்டுள்ளது என்று இந்தோனீ சிய அதிபர் ஜோக்கோ விடோடோ தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய தென்சீனக் கடல் பகுதியில் சீனா உரிமை கொண்டாடுவதற்கு அந்நாட்டிடம் வரலாற்றுப்பூர்வ ஆதாரம் எதுவும் இல்லை என்று தி ஹேக் நகரில் நடுவர் மன்றம் சென்ற மாதம் தீர்ப்பளித்தது.

நடுவர் மன்றம் வழங்கிய அத்தீர்ப்பை ஏற்கப்போவதில்லை என்று சீனா கூறி வருகிறது. இந்நிலையில் தென்சீனக் கடல் பகுதி பிரச்சினைக்கு அமைதிப் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண்பதில் இந்தோனீசியா ஈடு பட்டுள்ளதாக திரு ஜோக்கோ விடோடோ கூறியுள்ளார். அப் பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வு காண வேண்டும் என்று இந்தோனீசியா தொடர்ந்து வலியுறுத்தும் என்றும் அவர் சொன்னார்.

இந்தோனீசியாவின் 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தோனீசிய நாடாளுமன்றத்தில் ஜோக்கோ விடோடோ உரை யாற்றினார்.

இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார். படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!