மெலானியா: என் கணவர் டிரம்ப் மீது பெண்கள் கூறும் புகார்கள் பொய்யானவை

நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடவுள்ள வேட் பாளர் டோனல்ட் டிரம்பின் மனைவி மெலானியா டிரம்ப், தன் கணவர் மீது சில பெண்கள் கூறும் குற்றச்சாட்டுகள் பொய் யானவை என்று தெரிவித்துள் ளார். தேர்தல் நெருங்கும் வேளையில் தன் கணவருக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் இத்தகைய புகார்கள் கூறப்படுவதாகக் கூறிய மெலானியா, பெண்கள் பற்றி இழிவான கருத்துகளை டிரம்ப் கூறியதாக வெளியான வீடியோ செய்தியை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொன்னார். "டிரம்ப் மீது பெண்கள் கூறிய பாலியல் புகார்கள் பொய்யானவை. ஏனெனில் எனது கணவர் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அவர் நேர்மையானவர். அவர் எப்போதும் இது போன்ற தவறு கள் செய்யமாட்டார்," என்று மெலானியா கூறினார்.

பெண்கள் மீது அவருக்கு மதிப்பும் மரியாதையும் உள்ளது என்றும் அவர் சொன்னார். அவர் தன் கணவர் மீது கூறப்பட்டுள்ள புகார்களை மறுத்து பெண்களிடம் பிரசாரம் செய்து வருகிறார். பெண்களைப் பற்றி தரக் குறைவாக டிரம்ப் கூறிய கருத்துகள் அடங்கிய வீடியோ பதிவு வெளியான சில நாட்களில் பல பெண்கள் அவர் மீது புகார்கள் கூறினர். தங்களிடம் அவர் தகாத முறையில் நடந்துகொள்ள முயன்றதாக அப்பெண்கள் குற்றம் சாட்டினர். இதனைத் தொடர்ந்து திரு டிரம்பிற்கு ஆதரவு குறைந்து வருகிறது. கருத்துக் கணிப்புகளில் ஆளும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹில்லரி கிளின்டனை விட கணிசமான அளவு டிரம்ப் பின்தங்கியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!