பயங்கரவாதப் பதற்ற நாட்டினருக்கு விசா மறுக்கப்படலாம்

வா‌ஷிங்டன்: முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் செயலாக்க ஆணைகளில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கையெழுத்திட்டிருப்பார் என்று எதிர்பாக்கப்படுகிறது. பெரும்பாலான அகதிகளுக்குத் தடை விதிக்கவும் சிரியா, ஆறு மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் போன்றவற்றைச் சேர்ந்த குடிமக்களுக்கான விசாவை ரத்து செய்யவும் அந்த ஆணைகள் நேற்று பிறப்பிக்கப்படும் நிலை இருந்தது. தேசிய பாதுகாப்பில் முக்கிய தொரு நாளாக புதன்கிழமை விளங் குவதாக திரு டிரம்ப் தமது 'டுவிட்டர்' செய்தில் குறிப்பிட்டுள் ளார். "நாளை அமெரிக்கப் பாது காப்புக்குத் திட்டமிடும் பெரிய தொரு நாள். திட்டமிடப்பட்டு இருக் கும் அம்சங்களில் நாம் சுவரைக் கட்டி எழுப்புவதும் முக்கிய அம் சம்," என்று அவர் அத்தகவலில் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்குள் அகதிகள் நுழையாவண்ணம் பல மாதங் களுக்கு அவர் தடை விதிக்கும் ஆணையை பிறப்பிப்பார் என்றும் துன்புறுத்தலிலிருந்து தப்பித்த சமய சிறுபான்மையினருக்கு அந்தத் தடையிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்படும் என்றும் ராய்ட்டர்ஸ் செய்தி குறிப்பிடுகிறது.

அத்துடன் சிரியா, ஈராக், ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய நாடுகளிலிருந்து யார் வந்தாலும் அவர்களுக்கு விசா தர மறுக்கும் வகையிலான மற்றோர் ஆணையையும் திரு டிரம்ப் பிறப் பிக்கக்கூடும் என்று அடையாளம் தெரிவிக்க விரும்பாத நிபுணர்கள் தெரிவித்ததாக அச்செய்தி கூறி யது. அமெரிக்காவில் இருக்கும் ஏராளமான சட்டவிரோதக் குடி யேறிகளின் எண்ணிக்கை மிகாமல் தடுக்கும் அம்சமும் மெக்ஸிகோ எல்லையில் சுவர் எழுப்பக்கோரு வதும் எல்லைப் பாதுகாப்பு நட வடிக்கைகளில் அடங்கக்கூடும் என்றனர் அவர்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!