‘மியன்மார் தளபதிகள் தண்டிக்கப்பட வேண்டும்’

நியூயார்க்: மியன்மாரில் சிறு பான்மை ரொஹிங்யா முஸ்லிம் பெண்களையும் மாதர்களையும் பாலியல் பலாத்காரம் செய்ய ராணுவ வீரர்கள் அனுமதிக்கப் பட்டிருந்தால் அதற்காக காவல் துறை, ராணுவத்தளபதிகளைத் தண்டிக்க வேண்டும் என்று மியன் மார் அரசாங்கத்துக்கு மனித உரிமை கண்காணிப்புக் குழு அறைகூவல் விடுத்துள்ளது. பங்ளாதேஷ் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ள 69,000க்கும் மேற்பட்ட ரொஹிங்யா முஸ்லிம்களிடம் நேர்காணல் காணப்பட்டதில் 13 வயது சிறுமிகள் உட்பட பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளானதை விவரிக்கும் விளக்கப் படத்தைத் தயாரித்துள்ளதாக நியூ யார்க்கைத் தளமாகக் கொண்ட குழு தெரிவித்தது.

"பாலியல் வன்முறைகள் எதேச் சையாக நடந்தவை அல்ல. ரொ ஹிங்யா மக்களைக் குறி வைத்தே திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது," என்றும் மனித உரிமைக் கண் காணிப்புக் குழுவின் அறிக்கை குறிப்பிட்டது. இந்நிலையில் இந்தக் குற்றச் சாட்டுகளுக்கு மியன்மார் அரசிட மிருந்து பதில் பெற முடியவில்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறு வனம் தெரிவித்தது.

ரக்கைன் மாநிலத்தில் தங்களுடைய இருப்பிடங்களிலிருந்து வெளியேறி தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு உணவு விற்கும் சிறுமி. கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!