ஊழலை ஒழிக்க சீனா நடவடிக்கை

பெய்ஜிங்: சீனாவில் லஞ்ச ஊழலை ஒழிக்க அரசாங்கம் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருவதால் ஊழல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் சீனாவிலிருந்து தப்பிச்செல்வது கணிசமாகக் குறைந்துள்ளது என்று ஊழல் தடுப்பு கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. சென்ற ஆண்டு 19 பேர் மட்டுமே தப்பிச்சென்றதாகக் கூறப்படுகிறது.