தேர்தல் முடிவை எதிர்த்து பிரிபூமி கட்சி மனுத்தாக்கல்

பெட்டாலிங் ஜெயா: பிரதமர் மகா தீரின் கட்சியான மலேசிய பிரிபூமி பெர்சத்துக் கட்சியைச் சேர்ந்த ஏழு வேட்பாளர்கள் தேர்தல் முடி வை எதிர்த்து மனுத்தாக்கல் செய் துள்ளனர். மே 9ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் நான்கு நாடாளுமன்ற, மூன்று சட்டமன்றத் தொகுதிகளின் முடிவை ஏற்க அவர்கள் மறுத்துள்ளனர். தாசெக் குளுகோர், ஜெம்போல், தாப்பா, பாகான் சிராய் ஆகிய நான்கு நாடாளுமன்றத் தொகுதிகளிலும் லுபோக் மெர்பாவ், பேராக் கில் உள்ள சங்காட் ஜோங், ஜோகூரில் உள்ள காஹாங் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதி களிலும் போட்டியிட்டவர்கள் மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். பொதுத் தேர்தலில் கெஅடிலான் ராக்யாட் சின்னத்தில் பிரிபூமி கட்சி போட்டியிட்டது. இதில் பெரும்பாலான இடங் களில் அக்கட்சி வெற்றி பெற்றது. இருப்பினும் குறிப்பிட்ட இந்த ஏழு தொகுதிகளில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் பிரிபூமி கட்சி தோல்வியடைந்தது.

மேலும் செய்திகள்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!