ஆஸ்திரேலிய எழுத்தாளர் சீனாவில் கைது

ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற சீன எழுத்தாளர் ஒருவரை சீனா கைது செய்திருக்கிறது. கடந்த வாரம் அமெரிக்காவிலிருந்து சீனாவுக்குச் சென்ற யாங் ஹெங்ஜுன் கைதானதற்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சு நேற்று தெரிவித்தது.

ஆஸ்திரேலிய தற்காப்பு அமைச்சர் கிறிஸ்டஃபர் பைன் பெய்ஜிங்கிற்குச் செல்லவிருந்த நேரத்தில் கைது சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சீனாவின் முன்னைய தூதராக இருந்த யாங், இப்போது ஆஸ்திரேலிய குடிமகனாக உள்ளார். ஆஸ்திரேலியாவின் விவகாரங்களில் சீனா தலையிடுவதாக அவர் முன்பு குறைகூறியுள்ளதால், சீனா அவரை நீண்டகாலமாகக் கவனித்து வருவதாக அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.