‘டிப்தீரியா’ நோயால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஐந்து பிள்ளைகள் 

ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் ‘டிப்தீரியா’ நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஐந்து சிறுவர்கள் நேற்று முன் தினம் மருத்துவமனை ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
அண்மையில் அந்த நோயால் உயிரிழந்த இரண்டு வயது குழந்தையிடமிருந்து அவர் களுக்கு அக்கிருமி தொற்றியிருக் கலாம் என்று நம்பப்படுகிறது.
நோயின் கடுமையின் காரண மாக அந்த ஆண் குழந்தை மூன்று நாட்களுக்கு முன்னர் உயிரிழந்தது. அதோடு தொடர்பு கொண்டதாக நம்பப்படும் 52 பிள்ளைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் ஐவருக்கு நோய் தொற்றியது உறுதி செய்யப்பட்டது.
அந்த ஐந்து பிள்ளைகளில் மூவர் சிறுமிகள், இருவர் சிறு வர்கள். அவர்களில் மூத்த வருக்கு வயது 4.

உயிரிழந்த அந்த குழந் தையின் அக்காவும் பாதிக்கப்பட்ட சிறார்களில் அடங்குவார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவர்களின் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்து வர்கள் கூறினர். மூன்று பிள்ளைகள் நேற்று வீடு திரும்பி யதாக கூறப்படுகிறது.
உயிரிழந்த குழந்தையின் அக்காவிற்கு தடுப்பூசி போடப்பட வில்லை என்று கூறப்பட்டது.
கர்ப்பமாக இருக்கும் அந்தக் குழந்தையின் தாயாரும் பரிசோத னைக்கு உட்படுத்தப்பட்டார். அவருக்கு டிப்தீரியா நோயில்லை என்று மருத்துவர்கள் தெரிவித் தனர். சமய ரீதியிலான காரணங் களுக்காக மலேசியாவில் பிள்ளைகள் தடுப்பூசி போட்டுக் கொள்வதைப் பெற்றோர்கள் சிலர் விரும்புவதில்லை.