தாய் ரக்சா கட்சி கலைக்கப்பட்டது; கட்சி நிர்வாகிகளுக்கு அரசியல் தடை

பேங்காக்: தாய்லாந்தில் தாய் ரக்சா சாட் கட்சி கலைக்கப்பட்டது. அந்த கட்சியின் நிர்வாகிகளுக்கும் பத்து ஆண்டுகள் அரசியலில் ஈடுபட தடை விதிக்கப்பட்டது.
பொதுத் தேர்தலில் போட்டியிடு வதற்காக தாய் ரக்சா சாட் கட்சி, மன்னரின் சகோதரியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தது.
இது, தாய்லாந்து அரசியலில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
இதையடுத்து தாய் ரக்சா கட்சியை கலைக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி தாய்லாந்து தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தை நாடியது.
இதில் நேற்று தீர்ப்பு அளித்த  அமர்வு, தாய் ரக்சா கட்சி கலைக் கப்படுவதாக அறிவித்தது.

தீர்ப்பு வழங்கிய அமர்வில் இடம்பெற்ற நீதிபதிகளில் ஒருவர், “மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர் ஒருவரை அர சியலுக்கு இழுத்ததன் மூலம் அக் கட்சி அரச குடும்பத்தை அவ மதிக்கும் செயலில் ஈடுபட்டுள் ளது,” என்றார். அரசியலில் ஆதாயத்திற்காக அரச குடும் பத்தைச் சேர்ந்தவரை அக்கட்சி பயன்படுத்தியது என்றும் அவர் கூறினார்.
தாய் ரக்சா கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் பத்து ஆண்டுகள் அரசியலில் ஈடுபடக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
தாய்லாந்தில் இம்மாதம் 24ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற விருக்கிறது.

இந்நிலையில் முக்கிய எதிர்க் கட்சி கலைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 8ஆம் தேதி அன்று நான்கு மாதமேயான தாய் ரக்சா சாட் கட்சி, இளவரசி உபோல் ரத்தானா ராஜகன்யாவை பிரதமர் வேட்பாளராக அறிவித்து அதிர்ச் சியை ஏற்படுத்தியது.
சில வாரங்களில் போட்டியி லிருந்து விலகுவதாக அறிவித்த இளவரசி மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
தீர்ப்பு பற்றி பேசிய தாய் ரக்சா சாட் கட்சியின் தலைவர் பிரிச்சா போல் பொங்பானிச், மிகவும் வருத்தமளிக்கிறது என்றார். அப் போது அவரது குரல் தழுதழுத்தது. 

“கலைக்கப்பட்டது கட்சி மட்டுமல்ல. மக்களின் அடிப்படை உரிமையும் கலைந்துவிட்டது. எங்களுடைய கனவை அடைய முடியவில்லையென்றாலும் ஆதர வளித்த அனைவருக்கும் நன்றி தெரித்துக் கொள்கிறோம்,” என்று அவர் கூறினார்.
இதற்கிடையே நீதிமன்றத்தை சுற்றிப் போடப்பட்டிருந்த பலத்த பாதுகாப்பையும் மீறி அங்கு கூடிய தாய் ரக்சா கட்சியின் டீ சட்டை அணிந்த ஆதரவாளர்கள் தொடர்ந்து போராடுவோம் என்று முழக்கமிட்டனர்.