நஜிப் எதிர்ப்பாளர்கள் தாக்கப்பட்டனர்

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய ஆறு மாணவர்கள் நேற்று தாக்கப்பட்டனர்.
மலாயா பல்கலைக்கழகத்தில் திரு நஜிப் நேற்று உரையாற்றிக் கொண்டிருந்தார்.
அப்போது  பல்கலைக்கழகத்தில்  அருகில் இருந்த உணவகத்தில் இந்த மாணவர்கள் அவருக்கு எதிராக வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தனர். 
அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் லொக்மான் நூர் அடாம் உட்பட நஜிப்பின் ஆதரவாளர்களால் மாணவர்கள் தாக்கப்படுவதைக் காட்டும் காணொளி சமூக ஊடகத்தில் வலம் வந்தது.