குழந்தைகளுக்கு பரவும் அரிய நோய்: அமெரிக்கா எச்சரிக்கை

பிள்ளைகளிடையே பரவக்கூடிய, நோயெதிர்ப்பு மண்டலத்தை செயலிழக்கச் செய்யும் நோய் குறித்து அமெரிக்க சுகாதார துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நோய்க்கு பலஅமைப்பு வீக்கம் நோய் (எம்ஐஎஸ்-சி) என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் பெயரிட்டுள்ளது.

இந்நோய் முதன்முதலாக பிரிட்டனில் கடந்த ஏப்ரல் மாத பிற்பகுதியில் பதிவானது.

இந்நோயால் பாதிக்கப்பட்ட ஐந்து முதல் 16 வயதுடைய பிள்ளைகளுக்கு சுவாச நோய் போன்று கடுமையான காய்ச்சலுடன் தோலில் சிவப்பு தடிப்புகள், சிவந்த கண்கள் உள்ளிட்ட அறிகுறிகள் தென்படக்கூடும் என்று கூறப்படுகிறது.

இந்நோயாளிகளிடம் காணப்படும் அறிகுறிகள் சில சமயங்களில் கவாசாகி நோய் எனப்படும் அரிய நோய்க்கான அறிகுறிகளோடு ஒத்து இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கவாசாகி நோய் உடல் முழுவதும் உள்ள ரத்த நாளங்களை வீங்கச் செய்து கடுமையான வலியை ஏற்படுத்தும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

எம்ஐஎஸ்-சி நோயால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளிடையே நான்கு முதல் ஆறு வாரங்களுக்குப் பிறகு அறிகுறிகள் வெளியே தெரியத் தொடங்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இத்தகைய சிக்கல்களால் 85 சிறுவர்கள் பாதிக்கப்பட்டதாகவும் அதன் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் நியூயார்க் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. அவர்களில் கொவிட்-19 தாக்கம் உறுதி செய்யப்பட்ட மூன்று குழந்தைகள் உயிரிழந்ததாகவும் கூறப்படும் நிலையில், வேறு உயிரிழப்பு சம்பவங்களும் இந்த நோயின் தொடர்பில் ஆய்வு செய்யப்படுகின்றன.

பிரிட்டன், அமெரிக்கா மட்டுமல்லாது பிரான்ஸ், இத்தாலி, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளிலும் இந்த நோய் பரவியுள்ளது.

கொரோனா தொற்று அதிகமுள்ள இடங்களில், இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளதால் கொரோனாவுக்கும் இந்நோய்க்கும் தொடர்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!