அமெரிக்கா ஒப்புதல்

ஃபைசர் நிறு­வ­னத்­தின் கொவிட்-19 தடுப்­பூ­சியை அவ­சர தேவை­க­ளுக்­குப் பயன்­படுத்த அமெ­ரிக்க உணவு, மருந்து நிர்­வாக அமைப்பு ஒப்­பு­தல் அளித்­துள்­ள­தா­கத் தக­வல் வெளி­யா­கி­ இருக்கிறது.

இதை­ய­டுத்து, கொரோனா தொற்­றால் எளி­தில் பாதிக்­கப்­பட வாய்ப்­புள்ள மில்­லி­யன்­க­ணக்­கான மக்­க­ளுக்கு இன்­னும் சில நாள்­களில் அத்தடுப்­பூசி கிடைக்­க­லாம்.

அமெ­ரிக்­கா­வில் கொரோனா தொற்­றால் கிட்­டத்­தட்ட 295,000 பேர் இறந்­து­விட்ட நிலை­யில், ஃபைசர்-பயோ­என்­டெக் நிறு­வ­னங்­கள் கூட்­டாக உரு­வாக்­கி­யுள்ள தடுப்­பூ­சிக்கு அங்­கீ­கா­ரம் அளிக்­கப்­பட்­டி­ருப்­பது முக்கிய திருப்பு­முனை­யா­கப் பார்க்­கப்­ப­டு­கிறது.

பிரிட்­டன், பஹ்­ரேன், கனடா, சவூதி அரே­பியா, மெக்­சிகோ ஆகிய நாடு­க­ளுக்­குப் பின், ஃபைசர் தடுப்­பூ­சிக்கு ஒப்­பு­தல் அளித்­துள்ள ஆறா­வது நாடு அமெ­ரிக்கா. இன்­னும் சில வாரங்­களில், ஐரோப்­பிய ஒன்­றி­ய­மும் அந்­தத் தடுப்­பூ­சிக்கு ஒப்­பு­தல் அளிக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், இன்­னும் 24 மணி நேரத்­திற்­குள் ஃபைசர் தடுப்­பூ­சி­யைப் பயன்­ப­டுத்­தத் தொடங்­கி­விடு­வோம் என்று அமெ­ரிக்க அதி­பர் டோனல்ட் டிரம்ப் தெரி­வித்து இருக்­கி­றார்.

“ஃபெட்எக்ஸ், யுபி­எஸ் ஆகிய நிறு­வ­னங்­கள் உட­னான பங்­கா­ளித்­து­வத்­தின்­மூ­லம், நாட்­டின் எல்லாப் பகு­தி­க­ளுக்­கும் தடுப்­பூ­சி­யைக் கொண்டு சேர்க்­கும் பணியை ஏற்­கெ­னவே தொடங்­கி­விட்­டோம்,” என்று அதி­பர் டிரம்ப் கூறி­யுள்­ளார்.

அத்­து­டன், மூத்த குடி­மக்­க­ளுக்­கும் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் துறை­யி­னர் உள்­ளிட்ட முன்­க­ளப் பணி­யா­ளர்­க­ளுக்­கும் முன்­னு­ரிமை அளிக்­கப்­படும் என்று அவர் சொன்­னார்.

இதன்­மூ­லம், கொரோ­னா­வால் ஏற்­படும் மர­ணங்­களும் அந்­நோய்த்­தொற்­றுக்­காக மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­ப­டு­வ­தும் விரை­வில் குறை­யும் என்­றும் அவர் நம்­பிக்கை தெரி­வித்­துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!