அனைத்துலக விமானப் பயணத்துக்கு மீண்டும் எல்லைகளைத் திறந்த சவூதி அரேபியா

உருமாறிய கொரோனா கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இரு வாரங்களுக்கு முன்பு அனைத்துலக விமானச் சேவைகளை ரத்து செய்த சவூதி அரேபியா அதன் எல்லைகளை மீண்டும் திறப்பதாக இன்று (ஜனவரி 3) அறிவித்துள்ளது.

அங்கு இதுவரை 363,000க்கு அதிகமானோர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 6,200 பேர் உயிரிழந்தனர்.

அரேபிய வளைகுடா நாடுகளிலேயே சவூதியில்தான் அதிக அளவில் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ள நிலையில், அங்கு அதிகமானோர் குணமடைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அனைத்துலக விமானச் சேவைகள், நிலம் மற்றும் துறைமுகங்களை கடந்த 21ஆம் தேதி ரியாத் ரத்து செய்தது.

ஓமான், குவைத் போன்ற மற்ற வளைகுடா நாடுகளும் அத்தகைய தடைகளை அண்மைய நாட்களில் ரத்து செய்தன.

ஆனால், பிரிட்டன், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து வருவோருக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவர்கள் சவூதி அரேபியாவுக்கு வருவதற்கு முன்பு வேறொரு நாட்டில் 14 நாட்களுக்குத் தங்கி, கொரோனா தொற்று இல்லை என்ற பரிசோதனைச் சான்றிதழும் வைத்திருக்க வேண்டும்.

அந்த நாடுகளிலிருந்து வரும் சவூதி அரேபிய குடிமக்களுக்கு அந்தக் கட்டுப்பாடுகள் இல்லை. ஆனால், நாடு திரும்பிய பிறகு 2 வாரங்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்; பரிசோதனையும் மேற்கொள்ள வேண்டும்.

வளைகுடா நாடுகளிலேயே முதலாவதாக சவூதி அரேபியாவில் கடந்த மாதமே ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசிகள் போடும் பணி தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!