நெருக்கடியில் சிக்கியுள்ள மலேசிய சுகாதாரப் பராமரிப்பு கட்டமைப்பு

கோலா­லம்­பூர்: பல மாதங்­க­ளாக அதி­க­ரித்­துக்­கொண்டே போகும் புதிய கொவிட்-19 கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­க­ளைச் சமா­ளித்து வரும் மலே­சி­யா­வின் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு கட்­ட­மைப்பு, இப்­போது நெருக்­கு­த­லுக்கு உள்­ளா­கி­விட்­டது. இத­னால் பல நோயா­ளி­கள் சிகிச்சை பெற முடி­யாத சூழல் உரு­வா­கி­விட்­டது.

தனி­யார் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு வளங்­களை அர­சாங்­கம் தற்­போது நாடத் தொடங்­கி­யுள்­ளது.

இருப்­பி­னும், தங்­க­ளின் பணிச்­சுமை தாளாத அள­வுக்கு அதி­க­ரித்­து­விட்­ட­தாக மருத்­து­வத் துறை முன்­க­ளப் பணி­யா­ளர்­கள் குறை­கூ­று­கின்­ற­னர்.

இவர்­களில் சிலர் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்டு தனிமை உத்­தரவை நிறை­வேற்­று­கின்­ற­னர். இத­னால் ஊழி­யர்­க­ளின் எண்­ணிக்கை குறைந்த நிலை­யில், சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு கட்­ட­மைப்பு வலு­வி­ழந்­த­தா­கி­யுள்­ளது.

மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்­சைக்­காக சேர்ந்த நோயா­ளி­க­ளின் எண்­ணிக்கை சென்ற அக்­டோ­பர் மாதத்­தில் 3,000ஐ எட்­டி­ய­போதே திணற வைக்­கும் பணிச்­சுமை குறித்­துப் பல புகார்­கள் எழத் தொடங்­கின. பாது­காப்பு உடை­களில் மணிக்­கணக்­காக தின­மும் பணி­யாற்ற வேண்­டி­யுள்­ளது பற்றி முன்­க­ளப் பணி­யா­ளர்­கள் சிலர் ஊட­கங்­களுக்­குப் பெயர் குறிப்­பி­டா­மல் புகார் அளித்­த­னர்.

ஆனால் இப்­போதோ மருத்­து­வர்­கள் சிலர், வெளிப்­ப­டை­யா­கத் தங்­க­ளின் குமு­ற­லைக் கூறத் தொடங்­கி­விட்­ட­னர். பொது மருத்­து­வ­ம­னை­க­ளி­லும் தனி­மைப்­ப­டுத்­தும் மையங்­க­ளி­லும் 34,000 படுக்­கை­கள் மட்­டுமே இருக்க, சிகிச்சை தேவைப்­படும் கொவிட்-19 நோயாளி­க­ளின் எண்­ணிக்கை 40,000ஐ எட்­டி­விட்­டது.

“என் வேலை நண்­பர்­கள் பாதிக்­கப்­ப­டு­வதைப் பார்க்கிறேன். அவர்­கள் தனிமை உத்­த­ரவை நிறை­வேற்­று­வ­தும் முடிப்­ப­து­மாக இருக்­கின்­ற­னர். எங்­களில் பலர் களைத்­துப்­போய் சரிந்­து­விட்­டோம்,” என்று தம் ஃபேஸ்புக் பக்­கத்­தில் பதி­விட்­டி­ருந்­தார் டாக்­டர் முஸ்­தஃபா கமால் என்பவர்.

கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்ட மருத்­துவ ஊழி­யர்­கள் - 2%

மலே­சி­யா­வின் சுமார் 160,000 கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­களில் பாதிக்­கப்­பட்ட மருத்­துவ ஊழி­யர்­கள் இரண்டு விழுக்­காட்­டி­னர்.

இத­னால், எஞ்­சிய மருத்­துவ ஊழி­யர்­க­ளைக் கொண்டு திட்­ட­மி­டு­வது சிர­ம­மா­கி­யுள்­ளது. நிலை­மையைத் திட­மா­கச் சமா­ளிக்க வேண்­டும் என்­ப­தற்­காக சுகா­தார அமைச்சு, தற்­கா­லிக ஒப்­பந்த முறை­யில் மருத்­துவ ஊழி­யர்­களை வேலை­யில் அமர்த்­தத் தொடங்­கி­யது. சென்ற ஆண்டு இவ்­வாறு 8,000 ஊழி­யர்­கள் வேலை­யில் சேர்ந்­த­னர். இம்­மாத இறு­திக்­குள் மேலும் 3,500 பேர் சேர்க்­கப்­ப­டு­வர் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

தின­மும் பதி­வா­கும் புதிய கொவிட்-19 சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை முதல்­மு­றை­யாக சென்ற சனிக்­கி­ழ­மை­யன்று 4,000ஐத் தாண்­டி­யது. இத­னால் அவ­ச­ர­நி­லையை ஜன­வரி 11ஆம் தேதி­யன்று அர­சாங்­கம் பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யது.

இதன் மூலம் தனி­யார் மருத்­துவ வளா­கங்­க­ளை­யும் அர­சாங்­கம் உள்­ள­டக்கி, அவற்­றின் ஊழி­யர்­களைச் சேர்த்­துக்­கொள்ள முடி­யும். ஆனால் இரு­த­ரப்­புக்­கும் இடை­யிலான பேச்­சு­வார்த்தை முடிந்த பாடில்லை. கிரு­மித்­தொற்று நோயாளி­க­ளுக்­காக தனி­யார் மருத்­து­வ­மனை படுக்­கை­களில் 10% ஒதுக்­கப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. ஆனால், தனி­யார் மருத்­து­வக் கட்­ட­ணத்தை யார் செலுத்­து­வார் என்­ப­தில் இன்­னும் தெளி­வு இல்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!