அமெரிக்காவுடன் சீனா மீண்டும் பேச்சு

பெய்­ஜிங்: சீனா இவ்­வா­ரத்­தில் இரண்­டா­வது முறை­யாக அமெ­ரிக்­கா­வு­டன் பொரு­ளி­யல் பேச்சை நடத்­தி­யுள்­ளது.

சீன துணைப் பிர­த­மர் லியு ஹியும் அமெ­ரிக்க நிதி அமைச்­சர் ஜேனட் யெல­னும் பரஸ்­பர அக்­க­றைக்­கு­ரிய விவ­கா­ரங்­கள் பற்றி பேசி­னர்.

மெய்­நி­கர் காட்சி வழி­யாக நடை­பெற்ற இந்­தச் சந்­திப்­பில் இரு நாடு­க­ளைச் ேசர்ந்த உயர்­மட்ட பொரு­ளி­யல், வர்த்­தக அதி­கா­ரி­கள் பங்­கேற்­ற­னர்.

முன்­னைய அமெ­ரிக்க அதி­பர் டோனல்ட் டிரம்ப் நேர­டி­யாக சீனா­வு­டன் வர்த்­த­கப் போரில் ஈடு­பட்­டார்.

அதன் பிறகு இப்­போ­து­தான் இரு தரப்­பி­ன­ரும் சந்­தித்­துப் பேசி­உள்­ள­னர்.

அமெ­ரிக்க-சீன வர்த்­த­கப் பேச்­சில் திரு லியு தலை­மை­யி­லான சீனா­வின் குழு பங்­கேற்­றுள்­ளது.

கடந்த மே 26ஆம் தேதி அமெ­ரிக்க வர்த்­த­கப் பிர­தி­நிதி கேத்­த­ரின் டாயு­டன் இதே போன்ற வர்த்­த கப் பேச்சு நடை­பெற்­றது.

மனித உரிமை மீறல்­கள் தொடர்­பாக சீனா­வை அமெ­ரிக்க நிர்­வா­கம் தொடர்ந்து குறை­கூறி வரு­கிறது. சீனா­வுக்கு எதி­ராக இதர நாடு­களை அமெ­ரிக்கா ஒன்று சேர்த்­துள்­ளது.

இருப்­பி­னும் அமெ­ரிக்­கா­வு­ட­னான பொரு­ளி­யல் பேச்சை சீனா தீவி­ர­மாக்­கி­யுள்­ளது.

"வலு­வான பொரு­ளி­யல் மீட்சி மற்­றும் அெமரிக்­கா­வின் நலன்­க­ளுக்கு உகந்த துறை­களில் ஒத்­து­ழைப்­புக்கு ஆத­ர­வ­ளிக்­கும் பைடன்-ஹாரிஸ் திட்­டத்­தைப் பற்றி சீன பேரா­ளர்­க­ளு­டன் நிதி­ய­மைச்­சர் யெலன் பேசி­னர். அதே சம­யத்­தில் கவலைக்குரிய விவ­கா­ரங்­கள் குறித்­தும் பேசப்­பட்­டது," என்று அமெ­ரிக்க நிதி­ய­மைச்சு அறிக்கை தெரி­வித்­தது.

டாக்­டர் யெல­னு­டன் திரு லியு மேற்­கொண்ட காணொ­ளிப் ேபச்­சில் பொரு­ளி­யல் நில­வ­ரம், இரு­தரப்பு-பல­த­ரப்பு ஒத்­து­ழைப்பு குறித்து இரு தரப்­பி­ன­ரும் விரி­வா­கப் பேசி­னர் என்று சீனாவின் அதி­கா­ர­பூர்வ செய்தி நிறுவனமான ஸின்­ஹுவா கூறி­யது.

சீன-அமெ­ரிக்க பொரு­ளி­யல் உறவு மிக­வும் முக்­கி­யம் என்­பதை இரு தரப்­பி­ன­ரும் நம்­புவதாகவும் அது மேலும் சொன்னது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!