‘தடுப்–பூ–சி–கள் வந்து சேர தாமதம்’

கோலா­லம்­பூர்: தாய்­லாந்­தில் தயா­ரிக்­கப்­படும் ஆஸ்ட்­ரா­ஸெ­னிகா கொவிட்-19 தடுப்­பூ­சி­கள் தங்­க­ளுக்கு வந்து சேர தாம­த­மாகும் என்று எதிர்­பார்ப்­ப­தாக மலே­சியா, தைவான் அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

எத்­தனை நாட்­கள் தாம­த­மா­கும், எத்­தனை ஏற்­று­ம­தி­கள் தாம­த­மா­கும் என்­பது பற்றி மலே­சிய அறி­வி­யல் அமைச்­சர் கைரி ஜமா­லு­தீன் தெரி­விக்­க­வில்லை.

தென்­கி­ழக்கு ஆசி­யா­வில் ஆஸ்­ரா­ஸெ­னி­கா­வின் தடுப்­பூசி விநி­யோ­கத் திட்­டம் குறித்து எழுந்­துள்ள கேள்­வி­க­ளுக்கு மத்­தி­யில் இந்த தாம­தம் ஏற்­பட்­டுள்­ளது.

இது­வரை தாய்­லாந்­தில் உற்­பத்தி செய்­யப்­பட்ட 1.8 மில்­லி­யன் தடுப்­பூ­சி­களை, ஆஸ்ட்­ரா­ஸெ­னிகா தாய்­லாந்து அதி­கா­ரி­க­ளி­டம் ஒப்­ப­டைத்­துள்­ளது.

ஜூன் மாதத்­தில் அதி­க­மான தடுப்­பூ­சி­கள் கிடைக்­கும் ஆனால் பிற தென்­கி­ழக்கு ஆசிய நாடு­

க­ளுக்­கான விநி­யோ­கம் ஜூலை மாதத்­தில்­தான் தொடங்­கும் என்று சென்ற வாரம் ஆஸ்ட்­ரா­ஸெ­னிகா நிறு­வ­னம் தெரி­வித்­தி­ருந்­தது.

மலே­சி­யா­விற்கு தாய்­லாந்­தில் இருந்து இம்­மா­தம் 610,000 தடுப்­பூ­சி­கள் முதன்­மு­த­லில் ஏற்­று­மதி செய்யப்பட­வி­ருந்­தது.

அதைத் தொடர்ந்து ஜூலை மாதத்­தில் 410,000 தடுப்­பூ­சி­களும் ஆகஸ்ட், செப்­டம்­பர் மாதங்­க­ளுக்கு இடை­யில் 1.2 மில்­லி­யன் தடுப்­பூ­சி­களும் பெறவுள்ளதாக அர­சாங்­கம் முன்பு கூறி­யி­ருந்­தது.

இதற்கிடையே, உற்­பத்திப் பிரச்­சினை கார­ண­மாக ஆஸ்ட்­ரா­ஸெ­னிகா தடுப்­பூ­சி­கள் ஒருமாத காலம் தாம­த­மா­கக்­கூ­டும் என்­றார் தைவான் சுகா­தார அமைச்­சர்.

முன்னதாக, பிலிப்­பீன்­சிற்கு கொடுக்­கப்­ப­டு­வ­தாக இருந்த 17 மில்­லி­யன் ஆஸ்ட்­ரா­ஸெ­னிகா தடுப்­பூ­சி­களின் எண்ணிக்கை குறைக்­கப்­பட்­டதாகவும் பல வாரங்­களுக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­ட­தா­க­வும் அந்­நாட்­டின் அதி­பர் ஆலோ­ச­கர் சென்ற வாரம் கூறியிருந்தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!