தடுப்பூசி பேருந்துகள் மீது இந்தோனீசியர்கள் ஆர்வம்

பெக்­கான்­பாரு: தடுப்­பூசி போடும் நட­வ­டிக்­கையை எளி­தாக்­கும் வகை­யில் இந்­தோ­னீ­சிய நக­ரம் ஒன்று பேருந்­து­க­ளைப் பயன்­ப­டுத்­து­கிறது.

பெரிய அள­வி­லான சமய விழாக்­க­ளுக்­குப் பிறகு இந்­தோ­னீ­சி­யா­வில் தொற்­றுப் பர­வல் அதி­க­ரித்து வரு­கிறது.

இந்­நி­லை­யில் சுமத்ரா தீவில் உள்ள பெக்­கான்­பாரு நக­ரம் நட­மாடும் தடுப்­பூசி நிலை­யங்­கள் மீது கவ­னம் செலுத்தி வரு­கிறது. ஏற்­கெ­னவே தடுப்­பூசி பேருந்தை அறி­மு­கம் செய்த அந்­ந­கர நிர்­வா­கம் தற்­போது அந்­தப் பேருந்­தின் எண்­ணிக்­கையை 10ஆக உயர்த்தி உள்­ளது.

ஜூன் 1 ஆம் தேதி முதல் இந்­தப் புதிய முறை­யி­லான தடுப்­பூசி நட­வ­டிக்­கையை அது மேற்­கொண்டு வரு­கிறது. பொது­மக்­கள் ஆர்­வத்­தோடு இந்­தப் பேருந்­து­களில் ஏறி தடுப்­பூ­சி­க­ளைப் போட்­டுக்­கொள்­வ­தால் பேருந்­தின் எண்­ணிக்கை அதி­கப்­ப­டுத்­தப்­பட்­ட­தாக அதி­கா­ரி­கள் கூறி­னர்.

நக­ரில் உள்ள அனை­வ­ரும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளும் வரை இந்த பேருந்து தடுப்­பூசி நிலை­யத் திட்­டம் தொடர வேண்­டும் என விரும்­பு­வ­தாக டெல்வி என்­ப­வர் கூறி­னார். பேருந்­தில் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட பின்­னர் அதன் வசதி பற்றி அவர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் விளக்கினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!