சினோவேக் போட்டுக் கொண்ட 600 பேருக்கு தொற்று

பேங்காக்: தாய்லாந்தில் சினோவேக் தடுப்பூசி போட்டுக் கொண்ட சுமார் 600க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் தொற்றுக்கு ஆளாகியிருப்பதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, அவர்களுக்குக் கூடுதல் தடுப்பூசி போடுவது குறித்தும் அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.

சினோவேக் தடுப்பூசி போட்டுக்கொண்ட 677,348 சுகாதார ஊழியர்களில் 618 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக ஏப்ரல் முதல் ஜூலை வரை

யிலான சுகாதார அமைச்சின் தரவுகள் காட்டுகின்றன.

அவர்களில் தாதி ஒருவர் மாண்டுவிட்டார்; இன்னொரு

வரின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளது.

கூடுதல் தடுப்பூசி போட நிபுணர் குழு பரிந்துரைத்துள்ள நிலையில், "அது வேறு தயாரிப்பு தடுப்பூசியாக இருக் கும். அதாவது அது ஆஸ்ட்ரா ஸெனகா அல்லது ஒரு எம்ஆர்என்ஏ தடுப்பூசியாக இருக்கக்கூடும்," என்றார் சுகாதாரத் துறை மூத்த அதிகாரி ஒருவர்.

நேற்று அங்கு 9,418 தொற்று சம்பவங்களும் 91 மரணங்களும் பதிவாகின. இவை இரண்டுமே தாய்லாந்தில் பதிவான ஆக அதிக எண்ணிக்கையாகும்.

இந்தோனீசியாவிலும் சினோவேக் தடுப்பூசிகள் அதிகளவில் போடப்படுகின்றன. எனவே தனது சுகாதார ஊழியர்களுக்கு வேறு தயாரிப்பு தடுப்பூசி கூடுதலாக போடப்படும் என்று அந்நாடு கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!