கட்டுப்பாட்டை மீறி தொழுகையில் ஈடுபட்டவர்கள் கைது

கோலாலம்பூர்: பினாங்கு மாநி­லத்­தி­லுள்ள புக்­கிட் மெர்­தா­ஜாம் பகு­தி­யில் நட­மாட்ட கட்­டுப்­பாடு உத்­த­ரவை மீறி கூட்­டுத்­தொ­ழு­கை­யில் ஈடு­பட்ட 49 பேரை போலி­சார் கைது செய்­த­னர்.

ஹஜ்­ஜுப் பெரு­நாளை முன்­னிட்டு தொழு­கைக்­காக பள்­ளி­வா­ச­லுக்­குச் சென்­ற­வர்­க­ளுக்கு நட­மாட்ட கட்­டுப்­பாடு கார­ண­மாக அனு­மதி மறுக்­கப்­பட்­ட­தால், அவர்­கள் பள்­ளி­வா­ச­லுக்கு வெளியே அமர்ந்து கூட்­டாக தொழு­கை­யில் ஈடு­பட்­ட­னர்.

ஜூரு பகு­தி­யில், தாமான் பெலாங்கி வட்­டா­ரத்­தில் உள்ள பள்­ளி­வா­சல் ஒன்­றிற்கு வெளியே இந்­தத் தொழுகை நடந்தது.

நட­மாட்ட கட்­டுப்­பாடு கார­ண­மாக பள்­ளி­வா­ச­லில் 100 பேர் மட்­டுமே தொழு­கைக்கு அனு­ம­திக்­கப்­பட்­டது குறிப்­பி­டத்­தக்­கது.

கைது செய்­யப்­பட்ட 48 பங்­ளா­தேஷ் நாட்­ட­வர்­கள் நான்கு நாட்­கள் தடுப்­புக்­கா­வ­லி­லும் ஒரு உள்­ளூர்­கா­ரர் மூன்று நாள் தடுப்­புக்­கா­வ­லி­லும் வைக்க உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

இதன் தொடர்­பில் விசா­ர­ணை­தொடர்ந்து நடத்­தப்­ப­டு­வ­தாக பினாங்கு காவல்­துறை தலை­வர் முக­மட் ஷூஹாய்லி முக­மட் ஜைன் தெரி­வித்­தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!