ஜப்பானில் பிரதமர் பதவிக்கு போட்டி: தொலைக்காட்சி விவாதம் தொடங்கியது

ஜப்பானில் பிரதமர் பதவிக்கு போட்டி: தொலைக்காட்சி விவாதம் தொடங்கியது

1 mins read
5b3b046c-840b-414e-975b-d182d5275bfa
-

தோக்­கியோ: ஜப்­பா­னின் அடுத்த பிர­த­ம­ரா­வ­தற்­குப் போட்­டி­யி­டும் நான்கு பேரில் முன்­ன­ணி­யில் இருக்­கும் இரு­வர் தங்­கள் கட்சி உறுப்­பி­னர்­ க­ளின் வாக்­கு­க­ளைப் பெற, தங்­களது கொள்கை நிலைப்­பாட்டைத் தளர்த்­தியுள்ளதாகக் கூறப்­ப­டு­வதை மறுத்­துள்­ள­னர்.

ஜப்­பா­னிய பிர­த­மர் யோஷி­யிடே சுகா பதவி வில­கப் போவ­தாக இரண்டு வாரங்­க­ளுக்கு முன்­னர் அறி­வித்­த­தால், வரும் 29ஆம் தேதி ஆளும் மித­வாத ஜன­நா­ய­கக் கட்­சி­யின் அடுத்­த தலை­வ­ருக்­கான தேர்­தல் நடை­பெ­ற­வுள்­ளது. ஜப்­பா­னின் நாடாளு­மன்­றக் கீழ­வை­யில் மித­வாத ஜன­நா­ய­கக் கட்­சிக்கு அதிக இடங்­கள் உள்­ள­தால் அக்­கட்­சி­யின் தலை­வர் தான் அடுத்த பிர­த­மர் என்­பது உறுதி.

கட்­சித் தலை­வர் பதவிக்குப் போட்­டி­யி­டும் நான்கு பேரும் நேற்று முன்தினமும் நேற்­றும் தொலைக்­காட்சி விவாதங்­களில் பங்­கெ­டுத்து, தங்­கள் கொள்­கை­களை விளக்­கி­னர்.

தடுப்­பூசி திட்­ட அமைச்­சர் டாரோ கோனோ, 58, முன்­னாள் வெளி­யு­றவு அமைச்­சர் ஃபுமியோ கிஷி­யாடா, 64 இரு­வ­ருக்­குத் தான் அதிக ஆத­ரவுள்­ளது.

முன்னாள் உள்துறை அமைச்சர் சானே தாக்காய்ச்சி, 60, பாலினச் சமத்துவ அமைச்சர் சேக்கோ நோடா, 61 இருவரும் வெற்றி பெறுவது கடினம் என்று கருதப்படுகிறது.