சீனாவின் அச்சுறுத்தலுக்கு அடிபணியமாட்டோம்: தைவான் சூளுரை

தைப்­பெய்: சீனா தரும் நெருக்­கு­தல்­க­ளுக்கு தைவான் என்­றைக்­கும் அடி­ப­ணி­யாது என்­றும் தைவா­னின் ஜன­நா­யக முறை பாது­காக்­கப்­படும் என்றும் தைவா­னிய அதி­பர் சாய் இங் வென் சூளு­ரைத்­துள்­ளார்.

நேற்று நடை­பெற்ற தைவா­னிய தேசிய தினக் கொண்­டாட்­டத்­தில் அவர் இத­னைத் தெரி­வித்­தார்.

"தைவா­னின் சாத­னை­கள் அதி­க­ரிக்க, சீனா நமக்­குக் கூடு­தல் நெருக்­கு­தல்­க­ளைத் தரு­கிறது," என்று திரு­வாட்டி சாய் தைவா­னிய மக்­க­ளி­டம் தெரி­வித்­தார்.

தைவா­னைத் தனது ஒரு பகு­தி ­யாக சீனா கரு­து­கிறது. தன்­னி­ட­மி­ருந்து வில­கிச் சென்ற மாநி­ல­மாக தைவானை சீனா பார்க்­கிறது.

ஆனால் முற்­றி­லும் வேறு­பட்ட நிலைப்­பாட்டை தைவான் கொண்­டுள்­ளது.

தன்னை ஒரு தனி­நா­டாக அது கரு­து­கிறது.

தைவானை சீனா­வு­டன் இணைக்க சீனத் தலை­வர்­கள் முனைப்­பு­டன் உள்­ள­னர்.

தைவான் சீனா­வு­டன் இணை­வது உறுதி என்று சீன அதி­பர் ஸி ஜின்­பிங் நேற்று முன்­தி­னம் கூறி­னார்.

தைவானை வலு­கட்­டா­ய­மா­கத் தனது கட்­டுப்­பாட்­டின்­கீழ் சீனா கொண்டு வர முயற்சி செய்­யக்­கூ­டும் என்று அர­சி­யல் நிபு­ணர்­கள் சிலர் அச்­சம் தெரி­வித்­துள்­னர்.

அண்மையில் இதற்கு முன் இல்லாத அளவில் தைவானிய வான்வெளிக்குள் சீனா பல போர் விமானங்களை அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திருவாட்டி சாய் அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினார். சீனாவை எதிர்த்து நிற்பது உறுதி என்று அவர் தேர்தல் பிரசாரத்தில் கூறியதே அவரது மாபெரும் வெற்றிக்குக் காரணம் என்று நம்பப்படுகிறது.

ஜனநாயக முறையை தைவான் தற்காத்து வருவதாக திருவாட்டி சாய் நேற்று கூறினார். இருப்பினும், தைவான் அவசரப்பட்டு யோசிக்காமல் செயல்படாது என்றார் அவர். மாறாக, நாட்டின் தற்காப்பைப் பலப்படுத்தப்போவதாக அவர் உறுதி அளித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!