அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு; நால்வர் பலி

கொலோ­ராடோ: அமெ­ரிக்­கா­வின் கொலோ­ராடோ மாநி­லத்­தின் டென்­வர் பகு­தி­யில் நேற்று துப்­பாக்­கிக்­கா­ரன் ஒரு­வன் நடத்­திய துப்­பாக்­கிச் சூட்­டில் நான்கு பேர் கொல்­லப்­பட்­ட­னர். பின்­னர் காவல்­துறை அதி­கா­ரி­க­ளுக்­கும் துப்­பாக்­கிக்­கா­ர­னுக்­கும் நடந்த துப்­பாக்­கிச் சூட்­டில் அவ­னும் கொல்­லப்­பட்­டான்.

மத்­திய டென்­வர் வட்­டா­ரத்­தில் மாலை 5 மணிக்கு இந்­தச் சம்­ப­வம் நடந்­த­தா­க­வும் அப்­போது இரண்டு பெண்­கள் கொல்­லப்­பட்­ட­தா­க­வும் ஆட­வர் ஒரு­வர் காய­ம­டைந்­த­தா­க­வும் காவல்­துறை தரப்பில் கூறப்பட்டது.

பின்­னர் சிறிது நேரம் கழித்து அங்­கி­ருந்து சில கட்­ட­டங்­க­ளுக்கு அப்­பால் இன்­னோர் ஆட­வர் சுடப்­பட்டு கொல்­லப்­பட்­டார்.

அந்த இடத்­தில் துப்­பாக்­கிக்­கா­ர­னு­டன் போலி­சார் துப்­பாக்­கிச் சூடு நடத்­தி­னர். அப்­போது காவல்­துறை வாக­னம் ஒன்றை செய­லி­ழக்­கச் செய்த அந்த துப்­பாக்­கிக்­கா­ரன், அங்­கி­ருந்து தப்­பி­யோடி லேக்­வுட் என்­னும் இடத்­திற்­குச் சென்று விட்­டான். அந்த வட்­டா­ரத்­தில் மாலை 6 மணி­ய­ள­வில் அவன் நடத்­திய துப்­பாக்­கிச் சூட்­டில் ஆட­வர் ஒரு­வர் பலி­யா­னார்.

அங்கு வந்த காவல் துறை அதி­கா­ரி­கள், சந்­தே­கப் பேர்­வ­ழி­யின் காரை அடை­யா­ளம் கண்டு, அந்த காரை நெருங்­கும்­போது துப்­பாக்­கிக்­கா­ரன் அவர்­களை நோக்­கிச் சுடத் தொடங்­கி­னார். பதி­லுக்கு காவல் துறை அதி­கா­ரி­களும் துப்­பாக்­கிச் சூடு நடத்­தி­னர். அப்­போது அந்­தத் துப்­பாக்­கிக்­கா­ரன் கொல்­லப்­பட்­டான். ஆனால், அவன் காவல்­துறை அதி­கா­ரி­க­ளின் துப்­பாக்­கிச் சூட்­டில் கொல்­லப்­பட்­டானா என்ற விவ­ரம் வெளி­யி­டப்­ப­ட­வில்லை. இந்­தச் சம்­ப­வத்­தில் போலிஸ்­கா­ரர் ஒரு­வ­ரின் உடலில் துப்­பாக்­கிக் குண்டு பாய்ந்து, அவர் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று வரு­கி­றார்.

1999ஆம் ஆண்­டில் கொலம்­பைன் உயர்நிலைப் பள்ளியில் இரண்டு மாண­வர்­கள் சேர்ந்து 12 மாண­வர்­க­ளை­யும் ஓர் ஆசி­ரி­ய­ரை­யும் கொன்ற சம்­ப­வம் அமெ­ரிக்­கா­வையே அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கி­யுள்­ளது.

கொலோ­ரா­டோ­வில் கடந்த மார்ச் மாதம் துப்­பாக்­கிக்­கா­ரன் ஒரு­வன், மளி­கைக் கடை ஒன்­றில் நுழைந்து அங்­கி­ருந்த போலிஸ்­கா­ரர் உட்­பட 10 பேரைக் கொன்­றான். இந்தச் சம்பவம் நடந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு கொலோராடோ ஸ்பிரிங்ஸ் என்னும் இடத்தில் பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்ச்சி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டனர்.

கடந்த மாதம் டென்வரின் புறநகர்ப்பகுதியில் உள்ள பூங்காவில் காரில் சென்றவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆறு இளைஞர்கள் காயமடைந்தனர்.

அமெரிக்காவில் இந்த ஆண்டில் மட்டும் 687 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் நடந்துள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!